தேதி: April 4, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்
பாலேடு / பால் - ஒரு தேக்கரண்டி
மைதா - ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா (பேக்கிங் சோடா) - ஒரு சிட்டிகை
சுகர் சிரப்
எண்ணெய் - பொரிக்க
கிழங்கை கழுவி இட்லி சட்டியில் வேக வைக்கவும்.

பின்னர் தோல் நீக்கி கரண்டியால் மசித்து விடவும்.

மசித்த கிழங்குடன் பாலேடு / பால், மைதா, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். (நீர் அதிகமாக இருப்பதாக தோன்றினால் இன்னும் சிறிது மைதா சேர்க்கலாம்.)

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தீயை குறைத்து வைத்துக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

சுகர் சிரப் வழக்கமாக குலாப் ஜாமூனுக்கு தயாரிப்பது போல் தயார் செய்து, உருண்டைகளை போட்டு ஊற விடவும்.

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஜாமூன் தயார்.

பிசைந்த மாவை உடனே பொரித்து விடவும்.
சுகர் சிரப் செய்ய: சர்க்கரை 1 கப், நீர் ஒரு கப் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். பாகு அதிக கெட்டியாகவோ அதிகம் நீர்க்கவோ இருக்க கூடாது.
சூடான பாகில் சூடான எண்ணெயில் இருந்து எடுத்த ஜாமூனை உடனே சேர்க்க கூடாது. பொரித்து சில நிமிடத்துக்கு பின் சூடான சிரப்பில் போடவும்.
பரிமாறும் முன் 2 முதல் 3 மணி நேரம் ஊற நேரம் விடவும்.
Comments
ஜாமூன்
வனி சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஜாமூன் அருமையோ அருமை. பார்த்தவுடன் எடுத்து சாப்பிடத் தோணுது. கடைசி படத்தில் இருப்பது எனக்கே எனக்கு தான்.கலக்கலான ஈசி ரெசிப்பி. வாழ்த்துக்கள் வனி.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
Vani akka
Vani akka Superrrrrrrrrrr....
வனி
சூப்பரான ஜாமூன் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
ஜாமூன் பார்க்கவே சூப்பர் பா,கடைசி படம் அழகு.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
வனி அக்கா
சூப்பரோ சூப்பர். ரொம்ப வித்யாசமா கலக்கலா இருக்கு. அய்யோ அப்டியே சாப்டனும் போல இருக்கு.
எல்லாம் சில காலம்.....
ஜாமூன்
வனீ அக்கா ஸூபர் ஜாமூன் பாக்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு வாழ்த்துககள்
Hi i tried your recipe . It
Hi i tried your recipe . It came out very well and its too soft comparing gulap jamun mix. Thanks for ur tips:-)