தேதி: April 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. லாவண்யா அவர்களின் சொவ்மீன் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.
சொவ்மீன் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
காரட், பட்டாணி, சோளம், ப்ராக்கலி - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் / பட்டர் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு பொடி - கால் தேக்கரண்டி
வெண்ணெய் / ஆலிவ் ஆயில் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் சொவ்மீன் சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். (பாஸ்தா வகையை பொறுத்து வேகும் நேரம் மாறலாம்) வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி வைக்கவும். மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் தெளித்து ஆற விடவும்.

காய்கறிகளை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, வேக வைத்த காய்கறிகள் சேர்த்து வாசம் வரும் வரையில் வதக்கவும்.

காய்கறிகளுடன் சொவ்மீன், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

விருப்பபட்டால் வேர்கடலை சேர்த்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான சொவ்மீன் ரெடி.

Comments
kavitha
Congrats kq Kavitha. Ella recipyum kalakkal
Be simple be sample