சாஸி மக்ரோணி

தேதி: April 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சித்ராதேவி சுரேஷ்காந்த் அவர்களின் சாஸி மக்ரோணி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சித்ராதேவி அவர்களுக்கு நன்றிகள்.

 

மக்ரோணி/பாஸ்தா - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
பார்ஸ்லே, தைம், ரோஸ் மேரி - சிறிது
பாப்ரிகா - கால் தேக்கரண்டி
ஆரிகானோ - சிறிது
பட்டர் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - அரை தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
மிளகு பொடி - கால் தேக்கரண்டி
வெண்ணெய் / ஆலிவ் ஆயில் - சிறிது
மொசரில்லா சீஸ் (துருவியது) - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது


 

மக்ரோணியை வேக வைத்து தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி விட்டு அதனுடன் பார்ஸ்லே, தைம், ரோஸ் மேரி, பாப்ரிகா, ஆரிகோனா, உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து கிளறி வதக்கவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து வதங்கி நன்றாக சாஸியாக வரும் போது வேக வைத்த மக்ரோணியை சேர்த்து கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழை, சீஸ் துருவல் தூவி இறக்கவும்.
சுவையான சாஸி மக்ரோணி தயார். சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்