அவல் உருளை உப்புமா

தேதி: April 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கெட்டி அவல் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிது
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - கால் பாகம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வெங்காய, இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அவலை நன்றாக சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு உருளைக்கிழங்கை தோலுரித்து, சிறிய துண்டங்களாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், உளுந்து தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிறிது ரோஸ்ட் ஆனதும் அதில் அவலை போட்டு நன்றாக கிளறவும்.
கொத்துமல்லித் தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்