காலிஃப்ளவர் சாம்பார்

தேதி: April 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வாணி ரமேஷ் அவர்கள் வழங்கியுள்ள காலிஃபிளவர் சாம்பார் குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றிகள்

 

காலிஃப்ளவர் - ஒன்று
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும். காலிஃப்ளவரை தனித்தனி பூக்களாக பிரித்து எடுத்து ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த சுடுத்தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த மசாலாவை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கி பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
பருப்பு கலவை கொதித்ததும் காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு கொதிக்கும் குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான காலிப்ளவர் சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Meedum kq paguthiku therthedutha admin Anna&arusuvai team thanku

Be simple be sample