எலுமிச்சை சேவை

தேதி: April 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. முத்துலெட்சுமி அவர்களின் எலுமிச்சை சேவை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

சேவை - 200 கிராம் பாக்கெட்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கீறிய பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் சேவையை எடுத்துக் கொள்ளவும். சேவை மூழ்கும் வரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
அதில் பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் துருவிய தேங்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடவும்.
வதக்கியவற்றுடன் வேக வைத்த சேவையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சுவையான எலுமிச்சை சேவை தயார்.சுவையான எலுமிச்சை சேவை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லாமே சூப்பர். கலக்கலா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எல்லாமே அருமையா செய்து இருக்கீங்க‌. படங்களும் அருமை.

எல்லாம் சில‌ காலம்.....

Meedum kq paguthiku therthedutha admin Anna&arusuvai team thanku

Be simple be sample

Thanku bala.

Be simple be sample