தேதி: April 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. தீபா பிரகாஷ் அவர்களின் மிளகு காளான் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தீபா அவர்களுக்கு நன்றிகள்.
காளான் - 100 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
காளானை கழுவி சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளவும்.

மிளகை மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் காளானைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். காளான் தண்ணீர் விடும், அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

தண்ணீர் வற்றியதும் ஒன்றிரண்டாக பொடித்த மிளகை தூவி ஒரு நிமிடம் வதக்கவும்.

காளான் நன்கு வதங்கியதும் இறக்கி விடவும்.

சுவையான மிளகு காளான் ரெடி.
