தேதி: April 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கௌரி சுரேஷ் அவர்களின் சுரைக்காய் தோசை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கெளரி அவர்களுக்கு நன்றிகள்.
பச்சரிசி - ஒரு கப்
இட்லி அரிசி - ஒரு கப்
சுரைக்காய் - 1 1/2 கப்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
வரமிளகாய் - காரத்திற்கேற்ப
சுரைக்காயை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊற வைத்த அரிசி, நறுக்கிய சுரைக்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து, குறைந்தது 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க விடவும்.

மாவு புளித்ததும் எடுத்து தோசை கல்லில் எண்ணெய் தடவி தோசையாக வார்க்கவும். விருப்பப்பட்டால் நறுக்கின வெங்காயம், மிளகாய், கொத்தாமல்லி இலை கலந்து தோசை ஊற்றவும். இன்னும் சுவையாக இருக்கும்.

தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Comments
ஷீலா
வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எல்லாமே அருமையான குறிப்பு. இது ஹெல்தியான தோசை. செய்து பார்க்கிறேன்.
எல்லாம் சில காலம்.....
Balanayagi
அவசியம் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க பா.
நீங்க நண்டு specialist aa பாலா
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
ஷீலா
அய்யய்யோ! யாருப்பா இத கொளுத்தி போட்டது? ஏதோ கொஞ்சம் செய்ய வரும். அதுக்காக ஸ்பெஷலிஸ்ட்லாம் இல்ல. நண்டு யார் செஞ்சாலும் எப்டி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்ங்க.
எல்லாம் சில காலம்.....