மஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி)

தேதி: April 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அனிதா அவர்களின் மஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி) குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

மஷ்ரூம் - ஒரு கப்
முட்டை - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
மஷ்ரூமை சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்து அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
மஷ்ரூம் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் முட்டை கிரேவி தயார். இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான தகவல்

Reiki Guna ( Reiki Distance Group Healer )