கருப்பு மொச்சை கொட்டை குழம்பு

தேதி: April 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாந்தி அவர்களின் கருப்பு மொச்சை கொட்டை குழம்பு குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

கருப்பு மொச்சை கொட்டை - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

குக்கரில் மொச்சைக்கொட்டையை வேக வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் பட்டை, லவங்கம், பூண்டு மற்றும் சிறிதளவு வெங்காயம் சேர்த்து அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து மீதமுள்ள வெங்காயம் , கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்ததும் வேக வைத்த மொச்சையைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
சாதம், இட்லி, தோசையுடன் பரிமாற, சுவையான கருப்பு மொச்சைக்கொட்டை குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்