தேதி: April 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மேகலா பாலசுந்தரம் அவர்களின் கேரட் மில்க் ஷேக் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மேகலா அவர்களுக்கு நன்றிகள்.
கேரட் - 2
பால் - ஒரு டம்ளர்
பொடித்த சீனி - ஒன்றரை மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் - 2 மேசைக்கரண்டி
பாதாம் - 4
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 2
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

காரட்டைத் துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பாதாமை தோல் நீக்கி சில மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிது காரட் துருவலையும், பாதாமையும் அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வேக வைத்த கேரட் துருவலுடன், தோல் நீக்கிய பாதாம், சிறிது பால் சேர்த்து மையாக அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்க்ரீம், ஐஸ் கட்டிகள், பொடித்த சீனி அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

பரிமாற போகும் க்ளாஸில் மில்க் ஷேக்கினை ஊற்றி, தனியாக எடுத்து வைத்துள்ள கேரட் துருவல் மற்றும் பாதாமை தூவி அதனுடன் குங்குமப்பூவும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Comments
Joenachiappan@gmail.com
Hey Sheela it looks mouth watering wow way to go Sheela
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
?!
:-)
Presentation is an
Presentation is an art...semaiya irukku
Admin
Admin அவர்களுக்கு என் பொண்ணு என்னோட login id ல by mistake கொடுத்துட்டா
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
New mom
Thank u.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela