சிக்கன் ஜல்ஃப்ரஸி

தேதி: April 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் சிக்கன் ஜல்ஃப்ரஸி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழி - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை
எண்ணெய் - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி


 

சிக்கன் சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சிக்கனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மல்லித் தூள், தயிர் சேர்த்து கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவும் குடை மிளகாயும் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின்னர் ஊற வைத்த சிக்கன் சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் பாதியளவு வெந்ததும் மிளகு தூள் சேர்த்து பிரட்டவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் பிரட்டவும். கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி சில நிமிடங்கள் பிரட்டி எடுக்கவும்.
சுவையான சிக்கன் ஜல்ஃப்ரஸி தயார். இந்த சிக்கன் சற்று ட்ரையாக தான் இருக்கும். இதில் முக்கியமானது பச்சை மிளகாயும், மிளகும் தான். மிகவும் காரமான சிக்கன் வகை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லாமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். சூப்பரா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

Super kq. Ella recipeyum kalakkal

Be simple be sample

இந்த‌ சமையல் எங்கலுக்கு மிகவும் பிடிதிருக்கிறது.