தேதி: April 9, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் தலை மற்றும் முள்
காரட் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
செலரி - ஒன்று
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
மல்லித் தண்டுகள் - கைப்பிடி
பிரியாணி இலை - 3
முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கு
காய்கறிகளை விரும்பிய வடிவில் பெரிய துண்டங்களாக வெட்டி வைக்கவும்.

செலரி, மல்லி தண்டு மற்றும் வெங்காயத்தாள் ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு உயரமான பாத்திரத்தில் (Stock pot) மீன் தலை மற்றும் முட்களைப் போடவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகள், தண்டுகளை சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். அதில் பிரியாணி இலை மற்றும் முழு மிளகை சேர்க்கவும்.

கலவையை மிகவும் குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். 4 - 6 மணி நேரங்கள் கொதித்து மீன் மற்றும் காய்களின் சாறு இறங்கி கலவை வற்றி குறைந்திருக்கும்.

ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து மீன் ஸ்டாக்கை ஊற்றவும்.

ஸ்டாக் முழுவதும் நன்கு வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஃபிஷ் ஸ்டாக் ரெடி. பாட்டில்களில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

ஃபிஷ் ஸ்டாக் உபயோகித்து சூப், கேஸரோல், ஸ்டியூ போன்றவை தயாரிக்கலாம். இதற்கு பெரிய வகை மீன் தலை மற்றும் முட்கள் தான் சிறந்தது. நான் ரெட் சால்மன் மீன் பயன்படுத்தியுள்ளேன்.
Comments
வாணி
ஸ்டாக் சூப்பரா இருக்கு. மிகவும் ஹெல்தியாவும் இருக்கு. வாழ்த்துக்கள்:)
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
வாணி
சூப்பரா செய்து இருக்கீங்க. ஆனா 4-6 மணி நேரம் சூடு பண்றது சிம்ல வெச்சி பண்ணணுமா? அவ்ளோ கொதிச்சா எல்லா சத்தும் போய்டாதா? அவ்ளோ நேரம் அடுப்பில் இருந்தா கேஸ் சீக்ரம் காலி ஆகிடும்.
எல்லாம் சில காலம்.....