தேதி: April 9, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
துவரம்பருப்பு - ஒரு கப்
சிறுபருப்பு - கால் கப்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - சிறு துண்டு
வெங்காயம் - 2
தக்காளி - 2
முருங்கைக்காய் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
புளி - நெல்லிகாய் அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
துவரம்பருப்பு, சிறுபருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி அதனுடன் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி போடவும்.

காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

நன்கு கொதித்து முருங்கை வெந்ததும், அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை லேசாக கரண்டியால் மசித்து விட்டு சேர்க்கவும்.

கொதி வந்ததும் புளிக்கரைசலை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாம்பாரில் சேர்க்கவும்.

சுவையான முருங்கை சாம்பார் தயார்.

முருங்கைக்கு பதில் வேறு காய்களும் சேர்க்கலாம்.
எல்லா காய்களும் கலந்து சேர்த்து கலவை சாம்பாராகவும் வைக்கலாம்.
Comments
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றிகள்
எல்லாம் சில காலம்.....