rose chediku uram

Frnds rose chediku uram iruntha sollunga. Chedila ulla mottukalil karuppu niram padinthu ullathu ithanalm flower poochi aricha mari iruku pls solution sollunga

ரோஜா செடியில் சத்து பற்றாகுறை இருந்தால் செடி வெளுத்து காணப்படும். பூக்களில் கரும்புள்ளிகள் இருக்கும். பொதுவாக ரோஜா செடிக்கு உங்கள் வீட்டின் சமையலறை கழிவுகளே போதுமானது.
செடியை விட்டு அரை அடி தள்ளி அரை அடிக்கு குழி பறித்து அதில் உங்கள் வீட்டின் காய்கறி கழிவுகளை போட்டு மேலே மண்ணை போட்டு மூடி தண்ணீர் விடுங்கள். கழிவுகள் மக்கி செடிக்கு சத்துக்களை தரும்.
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் ஐந்துமிலி மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளியுங்கள்.

அன்புடன்
THAVAM

Naan roja chediyai thottiyl vaithuruken athil epadi kaaikari kalivai poduvathu. Sorry enaku neram kuraivagavey kidaikirathu athanal than Tamil letters use panna mudiyalai

காய்கறிகளைச் சிறிதாக அரிந்துகொள்ளுங்கள். ஒரு பழைய முட்கரண்டி கொண்டு தொட்டியில் செடியைச் சுற்றிலும் வேர்களை அறுத்துவிடாமல் மெதுவாகக் கிளறுங்கள். ஒரு இடத்தில் சிறிய பள்ளம் ஏற்படுத்தி அதனுள் சிறிது காய்கறிக் குப்பையைப் போடுங்கள். ஒரு வாரம் கழித்து மீண்டும் வேறொரு இடத்தில் குழி தோண்டிப் புதைக்கலாம். வேர் அறுந்துவிடாமல் இருப்பது முக்கியம். ஆரம்பத்திலிருந்தே இப்படிச் செய்துவந்தால் வேர்கள் கீழ் நோக்கிப் பரந்து வளர ஆரம்பிக்கும். மீண்டும் கிளறும் போது வேர் அறுந்து போகும் என்று பயப்படத் தேவையிராது.

குழி தோண்ட இஷ்டமில்லாவிட்டால், தேயிலைத் தூள், வெண்காயம் & பூண்டுத் தோல் போட்டுக் கிளறிவிடலாம். வாழைப்பழத் தோலை சிறிதாக நறுக்கி மண்ணின் மேல் போட்டுவிடலாம். இது மிக விரைவாகக் கறுத்து உரமாக மாறிவிடும். புதைக்காவிட்டாலும் கூட சாறு வடிந்து மண்ணோடு கலக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்தக் கேள்விக்கு ஒரு தனி இழை ஆரம்பித்திருக்கத் தேவையில்லை திவ்யா. :-) ஏற்கனவே தோட்டம், ரோஜா, தொட்டிச் செடிகள் பற்றியெல்லாம் இழைகள் இருக்கின்றன. அங்கேயே கேட்டிருக்கலாம். த்ரெட் தேட உங்களுக்கு நேரமில்லை என்பீர்கள். :-)

//Sorry enaku neram kuraivagavey kidaikirathu athanal than Tamil letters use panna mudiyalai// இதைச் சொல்லாமே இருந்திருக்கலாம் நீங்கள். :-)) & ;((
Sorry enaku neram kuraivagavey kidaikirathu. பழைய த்ரெட்கள் இருக்கின்றன, நீங்களே தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் இமா. :-) கேள்வியைப் பார்த்ததும் மக்கு மாதிரி, உங்களுக்கு உதவுமாறு தவத்தைக் கூப்பிட்டு வைத்தேன். அவரும் வேலைக்கு நடுவே இங்கு வந்து பதில் சொன்னார். இருவருக்கும் நேரமில்லைதான். ஆனாலும் உங்களுக்கு உதவ நினைத்தோம். இப்போது கொஞ்சம் மனவருத்தமாக இருக்கிறது.

உங்களுக்குத்தான் உதவி தேவைப்பட்டது. ஆனால் அதற்காக நீங்கள் ஒரு நிமிடம் மேலதிகமாகச் செலவளிக்க மாட்டீர்களா? அத்தனை கூட ஆகாது. அட்மின் செய்து கொடுத்திருக்கும் வசதி... நீங்கள் மேலே தட்டியதை அதே அளவு நேரத்தில் தன்னாலேயே தமிழில் மாற்றிவிட்டிருக்கும். ஒரு செக்கன் கூட மேலதிகமாக எடுத்திராது. பரவாயில்லை, அதைச் சொல்லிக் காட்டாமலாவது இருந்திருக்கலாம். :-) பதில் சொல்பவர்கள் மட்டும் அவர்களுக்கான பொழுதில் உங்களுக்காக நேரம் செலவளிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் சகோதரி!! ;(( இது கொஞ்சம் சுயநலமாகத் தெரியவில்லையா! :-)

ஆமாம், ஒரு செக்கன் கிடைப்பதே அரிதாக இருக்கும் உங்களுக்கு, இத்தனையும் படிக்க & காய்கறிக் கழிவைப் புதைக்கவெல்லாம் மட்டும் எங்கிருந்து நேரம் கிடைக்கும்!! அப்போ!! எங்கள் பதில்கள், பொழுது அனைத்தும் வீணேதானா! :-)))

:-) என் மீது உள்ள கோபத்தில் செடியைக் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் திவ்யா. வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள். கேள்வி என் கண்ணில் பட்டால் முடிந்தவரை உதவுவேன். ஆனால் இனிமேல் சாக்கு எதுவும் சொல்லாமல் தமிழில் எழுத வேண்டும். :-)

.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் இனி தமிழில் பதிவிடுகிறேன். அதே தொட்டியில் கழிவுகளை புதைக்காமல் வேறு தொட்டியில் புதைத்து வைத்து அதை உபயோகிக்களாமா சொல்லுங்கள் அக்கா. அப்படி அதை உபயோகித்தாள் அதை எத்தனை நாட்களில் எடுத்து உபயோகிக்கனும்னு சொல்லுங்க அக்கா

மன்னிக்கவும் இனி தமிழில் பதிவிடுகிறேன். அதே தொட்டியில் கழிவுகளை புதைக்காமல் வேறு தொட்டியில் புதைத்து வைத்து அதை உபயோகிக்களாமா சொல்லுங்கள் அக்கா. அப்படி அதை உபயோகித்தாள் அதை எத்தனை நாட்களில் எடுத்து உபயோகிக்கனும்னு சொல்லுங்க அக்கா

:-) மன்னிப்பெல்லாம் வேண்டாம். கோபம் இல்லை. :-)

//வேறு தொட்டியில் புதைத்து வைத்து// உபயோகிக்கலாம். ஆனால் பிறகு அதை வெறுமனே ரோஜாத் தொட்டியில் மேலாகப் போடுவதை விட மண்ணோடு கலந்துவிடுவது நல்லது. //எத்தனை நாட்களில் எடுத்து உபயோகிக்கனும்// இது சொல்ல இயலாது. மண்புழுக்கள், பூச்சிகள் இருக்கும் மண்ணாக இருந்தால் விரைவாக மக்கும். மண் உலர்ந்துவிடாமல் ஈரலிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

இம்மா அக்கா எனக்காக நேரம் ஒதுக்கியதற்க்கு ரொம்ப நன்றி அக்கா..

மேலும் சில பதிவுகள்