முருங்கைக்கீரை ஆம்லெட்

தேதி: April 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌


 

வாணலியில் அல்லது தோசைகல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக‌ நறுக்கிய‌ வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து லேசாக‌ வதக்கவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் வதக்கிய‌ முருங்கைக்கீரை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலந்து வைத்திருக்கும் முட்டை, கீரை கலவையை ஆம்லெட்டாக‌ ஊற்றவும்.
மிதமான‌ தீயில் வேக‌ வைத்து திருப்பி போடவும்.
ஆம்லெட் முழுவதுமாக வெந்ததும் எடுக்கவும். சுவையான‌ முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு பாலா, நல்லா ஹெல்த்தியான டிஷ்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

super akka.

ஹெல்தி அன்ட் டேஸ்டி.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ரொம்ப‌ டேஸ்டாவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க‌ ஷீலா.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்ஸ் ஜெயா. சூப்பர் சொன்னா பத்தாது. ட்ரை பண்ணுங்க‌. ஈஸி தானே?

எல்லாம் சில‌ காலம்.....

ம்ம். முருங்கை கீரையை முழுதும் வேக‌ வைக்க‌ கூடாது. பாதி வேக்காட்டில் செய்தால் ரொம்ப‌ ஹெல்தி தான். இந்த‌ ஆம்லெட் ரொம்ப‌ டேஸ்டியானது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

ம்ம். முருங்கை கீரையை முழுதும் வேக‌ வைக்க‌ கூடாது. பாதி வேக்காட்டில் செய்தால் ரொம்ப‌ ஹெல்தி தான். இந்த‌ ஆம்லெட் ரொம்ப‌ டேஸ்டியானது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

நல்ல‌ குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி முசி

எல்லாம் சில‌ காலம்.....