kulandhai ipothaiku vendam

Yn manaivi tharpodhu 1 vhara karbamaga ullar,yngaluku 2 vayathil 1 penkulandai uladhu. adhutha kulandhiku inum sila kalam idaiveli vendum yndru iruvarum mudivu seithu ullom. Tharpodhu en maniviku 1 vhara maga Adi vayetril vali adhigamaga varuvadhaga kurinaal pls,natural aga karpom adiyamal iruka oru vilakam therumaru vendukirn enudaiya mail id sriprasanth41@gmail.com. nandri..

//1 vhara karbamaga ullar,// ம். :-)

//adhutha kulandhiku inum sila kalam idaiveli vendum yndru iruvarum mudivu seithu ullom.// இல்லை ஸ்ரீபிரஷாந்த். நீங்க இருவருமாக முடிவு செய்திருந்தால் ஏற்கனவே எச்சரிக்கையாக இருந்திருப்பீர்கள். உங்கள் மனைவி இங்கு தன் கேள்வியை வைத்திருப்பார். நீங்கள் கேட்கத் தேவையிருந்திராது. //adhutha kulandhiku inum sila kalam idaiveli vendum yndru// :-) இடைவெளி கதையெல்லாம் சும்மா. :-) ஈஸியா விட்டுட்டு இருந்துட்டீங்க. இப்ப என்னவோ பிரச்சினை. வெளிநாடு போக நினைக்கிறீங்க; அதனால்தான் யோசிக்கிறீங்க. ;(

//natural aga karpom adiyamal iruka // கர்ர்ர்... ஆனதற்குப் பிறகு எப்படி இயற்கையாக ஆகாமல் இருப்பதற்கு ஆலோசனை சொல்வதாம்!! கரு கலைய ஆலோசனை வேண்டுமா? ;(

//oru vilakam therumaru vendukirn // உங்கள் மனைவிக்கு தானாக மீண்டும் மாதவிலக்கு ஏற்பட்டால் அல்லது கருச்சிதைவு ஆனால் அது உங்கள் அதிஷ்டம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் குடும்பப் பிரச்சினைகள் தீரும் வரை எச்சரிக்கையாக இருங்கள்.

//enudaiya mail id sriprasanth41@gmail.com.// கர்ர்ர்... ;) இங்கு கேள்வி கேட்டால் இங்குதான் பதிலை எதிர்பார்க்க வேண்டும். இணையத்தில் கேள்வி பதியப்பட்டதன் பிறகு ரகசியங்களுக்கு இடம் கிடையாது. வேலை வாய்ப்பு சம்பந்தமான விடயமானால் உங்களுக்கு மெய்ல் செய்யலாம் என்று இருந்தேன். இனி அனுப்புவதாக இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் ஈமெய்ல் ஐடீ கொடுத்து பதிலனுப்பக் கேட்பவர்கள் மீது நம்பிக்கை வரத் தயங்குகிறதே!! இனி அந்தக் கேள்விக்கும் அறுசுவையில்தான் பதில் வரும். :-)

என் மகன் வயது அல்லது சின்னவராகத்தான் இருப்பீர்கள் நீங்கள். ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. கர்ப்பமடைதலில் பெண்ணின் பங்கை விட ஆணின் பங்குதான் முக்கியமானது. தனியே ஒரு பெண்ணால் கர்ப்பமுற முடியாது. ஆண் வேண்டும். நீங்கள் உங்கள் மனைவியைக் கருவுற வைத்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் சுலபமாகத் தவிர்த்திருக்கலாம் அல்லவா? அருகே ஒரு கடை நிச்சயம் இருந்திருக்கும். இப்போது வேண்டாம் என்பது சரியல்ல. குழந்தையைப் பெற்றெடுத்தாலும் சரி அல்லது கலைக்க நினைத்தாலும் சரி... பாதிப்பு உங்கள் மனைவிக்குத்தான். உடல் உபாதைகள், மன உழைச்சல்கள்.... அவர்தான் அனுபவிக்கப் போகிறவர். உங்களுக்கு அது புரியாது. ;(

பெண் விளையாட்டுப் பொருள் அல்ல. குழந்தையும் விளையாட்டுப் பொருள் அல்ல. முன்பே யோசித்திருக்க வேண்டும் நீங்கள். மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று எழுதியிருந்தீங்க. கொஞ்சம் மாற்றி யோசிச்சுப் பாருங்க. அது உங்கள் குழந்தை. அப்படியானால் "நாம் ஒரு வாரம் கர்ப்பமாக உள்ளோம்," என்று சொல்லியிருக்க வேண்டும்!! அதுதான் உண்மை நிலவரம். நீங்கள் அவரைப் பிரித்துப் பார்த்து தீர்வுக்காக அவரைச் சிரமப்பட வைக்கப் போகிறீர்களா?

இதே கேள்வியை உங்கள் மனைவி தானாக முன்வந்து இங்கு கேட்டிருந்தாரானால் என் பதில் வேறாக இருந்திருக்கும். அவரை இங்கு உறுப்பினராக வர வையுங்கள். அவர் கேள்வியை வைக்கட்டும். யாரிடமிருந்தாவது அவருக்குச் சாதகமாகப் பதில் வரக் கூடும்.

‍- இமா க்றிஸ்

nengal solvadhu pol nan en manaiviyai pirithu parkavillai, nagal kadhal thirumanam seidhu kondom mudhal kulandhaiku piragu nangal 2 vadu kulandhaiku idaiveli vida vendum yendru peasuydhu unmaye, aanal tharpodhu yn manaivi adhai amothika marukiral, kudave aval udambum adikadi sary ilamal poividukiradhu matrum nan tharpodhu veli nadu sella thitamitu varugirn indha nilayel 2 kulandhaikali samlithu avalal iruka mudiyadhu avalai samalikave avaluku theriyadhu inum veguli thanamaga irukiral agayal thn netru andha kelviyai vinavienen.....ok ena seivadhu endru enku puriya vilai sago.

imma mam sariyana pathil .. brother ningal maruthuvarai santhiyunkal....

மேலும் சில பதிவுகள்