தேதி: April 16, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பன் - 2
பட்டர் - தேவையான அளவு
சீனி - தேவையான அளவு
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பன்னை நடுவே பாதியாக வெட்டி இருபுறமும் பட்டர் தடவி அதில் சுவைக்கேற்ப சர்க்கரையை தூவவும்.

அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி பட்டர் போட்டு உருகியதும் ஒவ்வோரு பன்னாக டோஸ்ட் செய்யவும்.

இருபுறமும் நன்கு டோஸ்ட் ஆனாதும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.

சுவையான பட்டர் பன்ஸ் தயார். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம். இது மதுரையின் கடை வீதிகளில் பிரபலமான ஒரு இனிப்பு.

Comments
பட்டர் பன்
அட! சூப்பரா இருக்கே! இப்படிப் பார்க்க எளிமையாகத் தெரிகிறது. ஆனால் செய்முறை தெரியாமல் முதல் தடவை சுவைத்துப் பார்த்தால் நிச்சயம் அடிமைதான். :-)
முன்பு சின்னவர்களுக்கு பாணில் இப்படிச் செய்து கொடுப்பது உண்டு. கல்லில் போடாமல் டோஸ்டரில் போடுவேன். பன்... சுவை பாணை விட நன்றாகவே இருக்கும். சோதனை எலியாக யாராவது சின்னவர்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்
வாணி
பசங்களுக்கு போட்டோ பார்த்ததும் இது போலசெய்யணும்ன்னு சொல்லிட்டாங்க.சிம்பள் & சூப்பர்
Be simple be sample
இமா
படிக்கிற காலத்தில் மதுரையில் இதை சாப்பிட்டுள்ளேன் இமா.
பன் இல்லாத நேரங்களில் பிரட்டில் டோஸ்டரில் தான் நானும் செய்வேன். ஆனால் பிரட்டை விட பன்னில் நல்லாயிருக்கும்.
\\சோதனை எலியாக யாராவது சின்னவர்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கிறேன்.// :)))
ரேவதி
செய்துப் பார்த்து பசங்களுக்கு பிடிச்சிருக்கா என்று சொல்லுங்கள் ரேவதி. நன்றி
பட்டர் பன்
தேங்க்யூ வாணி அக்கா.. இப்போ பாப்பாக்கு செய்து கொடுத்தேன்.. செம டேஸ்ட்.. அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருச்சு.. டெய்லி பண்ணி கொடுங்க அம்மானு சொல்லியிருக்கா.ஸ்கூல் முடிஞ்சு வந்தா ஈவ்னிங் ஈசியா பண்ணி கொடுக்கலாம்.. மறுபடியும் ஒரு தேங்க்யூ..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி