two wheeler driving

வணக்கம் தோழிகளே நான் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்று கொள்கிறேன். உங்கள் அனுபவம் மற்றும் டிப்ஸ் ப்ளீஸ்

எனக்கும் மற்றவர்களது அனுபவங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. யார் யார் முன்வருகிறார்கள் என்று பார்க்கலாம். :-)

உங்களுக்கு எந்த விடயம் சிரமமாகத் தெரிகிறது என்று சொல்வீர்களானால் யோசனை சொல்வது சகோதரிக்குச் சுலபமாக இருக்கும் பானுமதி.

என் அனுபவம் - ஏற்கனவே சைக்கிள் தண்ணீர் பட்ட பாடு. அதனால் மேட் 50 பாலன்ஸ் பிரச்சினையே இருக்கவில்லை. வாகனத்தைத்தான் அறிந்து கொள்ள வேண்டி இருந்தது. பழகியது... ஏதோ இரண்டு நாட்கள் ஓடியிருப்பேன். முதல் முறை முயற்சி செய்த போது... அளவு தெரியாமல் திருகி... எதிரே இருந்த இலந்தைப் பற்றையில் போய்ச் சொருகிக் கொண்டு நின்றேன். :-)

வாகனத்தையும் சாலை விதிகளையும் தெரிந்து வைத்தால் போதும். பயமில்லாமல் ஓடுங்கள். ரசித்து ஓடுங்கள். திடீர்ச் சிக்கல்கள் வரும்போது திகைத்துவிடாமல் சட்டென்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு நிலமையை ஆராய்து என்ன செய்வது என்று முடிவெடுங்கள். சட்டென்று ஆக வேண்டும். ஆரம்பத்திற்குத்தான் இதெல்லாம். பிறகு உங்கள் கட்டளைக்குக் காத்திராமல் மூளை எல்லாவற்றையும் இயக்கும். ஆரம்பிக்கும் சமயம் சிக்கலான பாதைகளைத் தவிர்க்கலாம்.

வாகனத்தில் ஏறும் முன் மூளையில் வேறு சிந்தனை இல்லாதிருப்பது நல்லது. தேவைக்கு மேல் குறைந்தது 5 நிமிடம் கணித்துக் கொண்டு பயணத்தை ஆரம்பியுங்கள். பாதி வேலையை முடிக்க வேண்டும்; அவசரமாகப் போக வேண்டும் என்று நினைக்கும் சமயம்தான் பாதையில் கவனம் இருப்பதில்லை. கண் மட்டும் பார்க்கும். என் மக்களுக்கு நான் எப்பொழுதும் சொல்லும் விடயம்... "Better late than never." :-) உண்மையான கருத்து - ஒன்றைச் செய்யாமலே இருப்பதை விடத் தாமதமாகவாவது செய்வது பற்றியது. என் விளக்கம் - சேர வேண்டிய இடத்தைப் போய்ச் சேராமலே இருப்பதை விட, தாமதமாகவாவது போய்ச் சேர்வது நல்லது. :-) அவசரப்பட்டால் போய்ச் சேரும் இடம் வைத்தியசாலையாகவோ, போலீஸ் நிலையமாகவோ, மேலுலகாவோ கூட இருக்கலாம். பொறுமையாக ஆறுதலாக ஓட்டினால் எமக்கும் நல்லது; சாலையைப் பகிர்ந்துகொள்ளும் மற்றவர்களுக்கும் நல்லது.

பொருத்தமான ஆடை அணிந்துகொள்ளுங்கள். சேலைத் தலைப்பைச் சொருகிக் கொள்வது & காட்டர் அணிவது நல்லது. துப்பட்டா பறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சக்கரத்தில் சிக்கிக்கொண்டால் ஆபத்து. இது பில்லியன் ரைடருக்கும் பொருந்தும்.

எனக்குப் பிரச்சினையாக இருந்த ஒரே விடயம் என் உயரம். நிறுத்தும் சமயம் வாகனம் சரிந்து, அந்தப் பாரத்தைக் இடது பாதத்தின் விரல்கள்தான் தாங்க வேண்டும். சின்னவர்களை ஏற்றிக் கொள்ளும் போது பாதத்திற்கு வேலை அதிகம். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருந்தது. ஆனாலும், ஒரே சமயம் 3 குட்டீஸை ஏற்றிக்கொண்டு உலாவந்திருக்கிறேன். அவர்களுக்கு ரூல்ஸ் சொல்லியிருந்தேன். என் அறிவுறுத்தல் கிடைக்கும் முன் ஏறவோ இறங்கவோ கூடாது. நான் தயாரானதன் பின்னால் அவர்களுக்கு அனுமதி கொடுப்பேன். பெரியவர்களை ஏற்றிச் செல்வது சுலபம்.

முக்கியமான விடயம்... வாகனத்தை இயக்கும் முன் ஃபோனை அணைத்துவிடுங்கள். பேசாவிட்டால் கவனம் சிதற வாய்ப்பிருக்கிறது.

நான் சொன்னது சும்மா பொதுவான விடயங்களும் என் அனுபவங்களும்தான். ;) இந்தியாவில் வசிக்கும் சகோதரிகளிடமிருந்துதான் ஓடுவதற்குக் பழகுவது பற்றி உங்களுக்கு உபயோகமான தகவல்கள் கிடைக்கும். பொறுத்திருங்கள். விரைவில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது பெரிய விடயமில்லை என்பதை நீங்களே உணருவீர்கள்.

‍- இமா க்றிஸ்

thank you for your kind reply I will the same you said . fear is my main factor

மேலும் சில பதிவுகள்