இருமல்

மேடம்,
என் பையன் 4வயது,அவன் இருமலால் கஷ்டப்படுகிறான்.வரட்டு இருமல் போக என்ன செய்யனும்,
நன்றி.....

வரட்டு இருமலுக்கு பனங்கல்கண்டும்,மிளகும் பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் வரட்டு இருமலுக்கு கேட்கும்

டியர் குமாரி அவர்களுக்கு, வரட்டு இரும்மலுக்கு காரணம் குழந்தையின் உடல் சூட்டினால் கூட இருக்கலாம். அல்லது வைரல் இன்ஃபெக்ஷ்ன் ஆகவும் இருக்கலாம்.
உடல் சூட்டினால் வரும் இரும்பலுக்கு நிறைய தண்ணீர் ஆகாரம் கொடுத்து வயிற்றை குளிரச் செய்ய வேண்டும். குறைந்தது பத்து நாட்களாவது இந்த வரட்டு இரும்பல் இருந்து விட்டு தான் போகும்.
மருந்துக் கடையில் கிடைக்கும் இரும்பல் மருந்தை வாங்கி மூன்று வேளை கொடுத்துப் பாருங்கள். வெறும் இரும்பல் மருந்தாக பார்த்து வாங்கவும். சளி பிடித்திருக்கும் பொழுது கொடுக்கும் இரும்பல் மருந்தை கொடுத்தால் பயன் இருக்காது.
இதனுடன் தினமும் பசும் பாலில் தேனைக் கலக்கி கொடுக்கலாம். தேன் இரும்பலை அடக்கும் சக்கி வாய்ந்த மருந்து.
இன்ஃபெக்ஷனாக இருந்தால் மூக்கில் நீர் வடியும், உள் காய்ச்சல் இருக்கும், காதில் வலியோ, அல்லது நமைச்சல் இருக்கும், இரும்பலுடன் அது போன்ற ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் கூட கட்டாயம் ஆன்டிபயாடிக் கொடுத்தால் தான் சரியாகும்.இதை நாமாக மருந்துக் கடையில் வாங்க முடியாது.ஆகவே குழந்தை நல மருத்துவரால்தான் உதவ முடியும். ஆகவே வேண்டிதை ஆவனைச் செய்யவும்.நன்றி.

மேலும் சில பதிவுகள்