தேதி: April 21, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரை கிலோ
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
பட்டை - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிக்ஸியில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியவற்றுடன் சிக்கன் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கிய சிக்கனில் மிளகு தூள், சீரக தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

கடைசியாக அரைத்த தக்காளி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கிளறவும்.

எல்லாம் சேர்ந்து வதங்கியதும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.

சிக்கன் நன்கு சுருள வெந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் கிரேவியாக இருக்கும் போதே இறக்கி விடலாம். சுவையான தக்காளி சிக்கன் தயார்.

Comments
ஸ்வர்ணா
நல்லா இருக்கு. மிளகாய் தூளே சேர்க்காமல் மிளகு காரம் கொண்டு அருமை.
எல்லாம் சில காலம்.....
நன்றி
எனது குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பாலா
பாலா மிக்க நன்றி ஆமாங்க மிளகும் பச்சை மிளகாயும் தான் இதுக்கு காரம் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா,
பச்சை மிளகாய் சேர்த்து செய்யும் கறிகள் எனெக்குப் பிடிக்கும் ஸ்வர்ணா, செய்துப் பார்க்கிறேன். கடைசிப் படம் பார்த்ததும் பெப்பர் சிக்கன் என்று நினைத்தேன். :)
சுவா
ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க குறிப்பு... சூப்பர் :) வெள்ளி அல்லது சனி எங்க வீட்டில் இது தான். வனி முடிவு பண்ணிட்டேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Paarkavea nalla irruku
Seithu parthu vidu ennudaiaya comment soltrean
வாணி
வாணி மிக்க நன்றிங்க :) மிளகு சேர்த்தாலே எப்படியும் கலர் இப்படித்தான் வருது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வானி
மிக்க நன்றி வனி :) செய்து பார்த்து சொல்லுங்க.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஆதி
மிக்க நன்றிங்க.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.