தேதி: April 22, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பொட்டேட்டோ ப்யூரி பவுடர் - ஒரு கப்
ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி
ரவை - 2 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் - 2 மேசைக்கரண்டி
சீனி - அரை கப்
நெய் (அ) வெண்ணெய் - 25 கிராம்
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - 2 துளி
உப்பு - சிட்டிகை
பொட்டேட்டோ ப்யூரி பவுடர், ரவை, ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.

இந்த கலவையுடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி விடவும்.

அதில் பாதாம் பருப்பு தூள் சேர்த்து கிளறவும்.

அதன் பின்னர் சீனி சேர்த்து கிளறவும்.

கடைசியாக வெனிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.

சுவையான பொட்டேட்டோ ப்யூரி கேசரி தயார்.

இதில் பொட்டேட்டோ ப்யூரி பவுடருக்கு பதிலாக வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம். மூன்று பெரிய உருளைக்கிழங்குகள் போதுமானது.
Comments
கிழங்கு - கேசரி
பார்க்க அழகா இருக்கு. குறிப்பு பிடிச்சிருக்கு.
- இமா க்றிஸ்
பொட்டேட்டோ ப்யூரி கேசரி
பொட்டேட்டோ ப்யூரி கேசரி செய்முறையை பார்க்க இலகுவாக
இருக்கிறது. நன்றி முசி
MUSI
supera iruku musi. kalakal kesari.
எல்லாம் சில காலம்.....
முசி
முசி கிரியேட்டிவ் குறிப்பு. வாழ்த்துக்கள். :))
முசி
முசி அருமையா இருக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி
குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் டீமிர்க்கு நிக்க நன்றி.
மிக்க நன்றி;இமாம்மா.
ரொம்ப நன்றி;விஜி சசி.
வாழ்த்திர்க்கு மிக்க நறி;பாலா.
வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி;வாணி.
பதிவிர்க்கு மிக்க நன்றி.சுவர்ணா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.