
அன்பு குயின்ஸ்.... எல்லோரும் நல்லா சமைச்சு நல்லா சாப்பிடுறீங்கன்னு நினைக்கிறேன் ;) உங்க உதவி இல்லாமல் இந்த தலைப்பு 6 பகுதிகளாகி இருக்காது. எல்லோருக்கும் எங்கள் நன்றிகள். வந்துவிட்டேன் மீண்டும் குறிப்புகளோடு. இம்முறையும் 2 வாரங்களாவது நேரமெடுக்கலாம். ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 4 இன்றோடு முடிவடைகிறது. நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)
இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.
1. 140 - சில்லி சீஸ் பராத்தா (ரேவதி)
2. 142 - டாங்டி கபாப்
3. 144 - மீன் ரோஸ்ட் - சுலப முறை (வாணி)
4. 146 - கோதுமை அல்வா (பாலா)
5. 147 - முந்திரி கீர் (ஷீலா)
6. 150 - ஸ்டஃப்டு வெண்டைக்காய் (நிகி)
7. 168 - சர்க்கரை போளி (பாலா)
8. 177 - இஞ்சி சட்னி (teddy)
9. 186 - காரட் கேக் (ஷீலா)
10. 179 - 7 ஸ்டார் கேக் (பாலா)
11. 188 - தேங்காய் பூ கேக்
12. 190 - தோசைக்கல் கேக் (பாலா)
13. 192 - கொத்தமல்லிச் சட்னி (வாணி)
14. 194 - கோழி வறுத்த கறி (வாணி)
15. 200 - சாஹி சிக்கன் குருமா (வாணி)
16. 207 - சிக்கன் மிளகு சாப்ஸ் (ரேவ்ஸ்)
17. 210 - நிலக்கடலை சட்னி (ரேவ்ஸ்)
18. 246 - மல்லி காரச் சட்னி (வாணி)
19. 280 - உருளைக்கிழங்கு பக்கோடா (ஷீலா)
20. 275 - அரிசி பருப்பு தோக்ளா
21. 307 - கோதுமை சமோசா (பாலா)
22. 299 - கேழ்வரகு சாட்ஸ் (நிகி)
23. 332 - ஆப்பிள் ஷேக் (ரேவ்ஸ்)
24. 329 - ராகி டிலைட் (பாலா)
25. 345 - ஆரஞ்சு மில்க் கிரீம் (ஷீலா)
26. 380 - இளநீர் சோடா (நிகி)
27. 433 - குழிப்பணியாரம் (teddy)
28. 432 - மீன் கபாப்
29. 414 - மட்டன் கோஃப்தா
30. 486 - கடலைமாவு உருளை சப்பாத்தி (ஷீலா)
31. 481 - வெஜிடபிள் இட்லி (ரேவ்ஸ்)
32. 478 - ரவை கலந்த குழிப்பணியாரம் (ரேவ்ஸ்)
33. 560 - பழக்கலவை சாலட் (கவிதா தயாநிதி)
34. 555 - மசாலா சுண்டல் (ரேவ்ஸ்)
35. 4616 - குடைமிளகாய் இறால் மசாலா (ஷீலா)
36. 4483 - வெஜ் கோஃப்தா க்ரேவி (கவிதா தயாநிதி)
37. 4548 - கோதுமை அல்வா (எளிய முறை)
38. 1743 - மீன் குழம்பு (வாணி)
39. 1722 - புதுவகை புரூட் சாலட் (teddy)
40. 1475 - வெஜ்-கட்லெட் (கவிதா தயாநிதி)
41. 1490 - வானவில் உருண்டை
42. 1480 - சேப்பங்கிழங்கு கட்லெட் (teddy)
43. கார மைதா போளி 1274
44. டைமன் கட் 1068
45. கடலைமாவு தோக்ளா - 1481
46. அரிசி வடை 2147
47. வேர்கடலைபொடி 5473
48. 8746 சேனை சிப்ஸ்
49. கொத்தவரை வத்தல் 7536
50. கொத்தவரை பொரியல் 7533
இந்த பட்டியல் ரொம்ப குட்டியா இருக்குன்னு ஃபீல் பண்றவங்களுக்கு ஒரு நோட்... :) ஏற்கனவே தேர்வு செய்து நீங்க செய்யாம விட்ட குறிப்புகள் இருக்கா? இருந்தா... ஏற்கனவே செய்துட்டு அனுப்பாம வெச்சிருக்கீங்களா? அப்படின்னா எப்போது அனுப்ப இயலும்? இல்ல இன்னும் செய்யவே இல்லையா? அப்படின்னா அதை நீங்க செய்து அனுப்ப போறீங்களா? இல்ல அதை உங்களால் செய்ய முடியலயா? அதை எனக்கு இங்கே சொல்லுங்க. அதன் அடிப்படையில் தான் மீதம் லிஸ்ட்டை நான் சேர்க்கணும். எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நீங்க செய்துட்டு அனுப்பாத குறிப்புகள், அல்லது செய்ய முடியாம விட்டுட்ட குறிப்புகளை இங்கே சொல்லி ஒரு பதிவிடுங்கள் :) நன்றி.
இதோ ரூல்ஸ்:
1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
4. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
5. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
6. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).
நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், லின்க் எடுத்து தர இயலும் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)
குறிப்பு அனுப்புவது:
குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க. எனக்கு தெரிஞ்சவரை எல்லா குறிப்பும் ஒரு ரவுண்டு அடிச்சு 4 ஸ்டெப்ஸ்க்கு மேல் உள்ளதை தான் கொடுத்திருக்கேன், ஒருவேளை என் கண்ணில் மிஸ் ஆகி இருந்தால், பார்த்துக்கங்க :)
என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)
குறைந்தபட்சம் 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;) மாற்றம் செய்தாலோ, அல்லது புது குறிப்புகள் சேர்த்தாலோ அதை மீண்டும் ஒரு பதிவில் சொல்லுங்க, பழைய பதிவை எடிட் பண்ணா மிஸ் ஆக வாய்ப்பிருக்கு.
இனி என்ன... வழக்கம் போல பிசி வீக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.
குட்டி நோட்: நிறைய குறிப்புகளை பார்ப்பதால் எல்லாமே பார்த்த உணர்வை தருது. ஒரு வேளை நான் ஏற்கனவே யாரும் செய்த குறிப்பை மீண்டும் பட்டியலிட்டிருந்தா தயவு செய்து எனக்கு சொல்லிடுங்க. நன்றி.
Comments
en list
1 ஆப்பிள் ஷேக்
2 நிலகடலை சட்னி
3 சிக்கன் மிளகு சாப்ஸ்
4 ரவை கலந்த குழிபணியாரம்
5 மசாலா சுண்டல்
6 வெஜிடபிள் இட்லி
Be simple be sample
Kitchen Queen - 5 - Remaining
ஆறு குறிப்பயும் சேர்த்து அனுப்ப தான் லேட் ஆகுது பா.. நான் இதை எல்லம் முடிச்சு அனுப்பிடரேன். அதுக்கு அப்புறம் இதுக்கு வரேன்...
ஃபளூடா/falooda 2853
பாசுமதி கீர் 1292
ஜவ்வரிசி புலாவ் 1256
பனீர் பட்டாணி குருமா 769
பாலக் பனீர் கிரேவி ( வித்யா வெங்கட் )
உருளை-பரங்கிக்காய் கறி (வித்யா வெங்கட்)
இதை இந்த வார இறுதிக்குள் அனுப்பரேன்...
துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..
KQ - 6
192 - கொத்தமல்லிச் சட்னி
194 - கோழி வறுத்த கறி
1743 - மீன் குழம்பு
246 - மல்லி காரச் சட்னி
207 - சிக்கன் மிளகு சாப்ஸ்
555 - மசாலா சுண்டல்
வாணி
சிக்கன் மிளகு சாப்ஸ், மசாலா சுண்டல் நான் எடுத்துட்டேன்ப்பா.
Be simple be sample
லிஸ்ட்
தேங்க்ஸ் ரேவதி, நான் கவனிக்கவில்லை.
என் லிஸ்ட்டில் இதை சேர்த்துக்கோங்க வனி
200 - சாஹி சிக்கன் குருமா
144 - மீன் ரோஸ்ட் - சுலப முறை
டீம்
4548 - கோதுமை அல்வா (எளிய முறை)
இதோட லிங்க் ஓப்பன் பண்ண முடியல டீம்
Kitchen queen. -6
கடலைமாவு உருளை சப்பாத்தி - 486
காரட்கேக் - 186
குடைமிளகாய் இறால் மசாலா - 4616
உருளைக்கிழங்கு பக்கோடா - 280
ஆரஞ்சு மில்க் கிரீம் -345
முந்திரி கீர் - 147
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
kitchen queen - 6
உருளைக்கிழங்கு பக்கோடா- 280
பழக்கலவை சாலட்-560
வெஜ்-கட்லெட்- 1475
வெஜ் கோஃப்தா க்ரேவி- 4483
இதுவும் கடந்து போகும்
Kavitha dayanithi
நான் உருளைக்கிழங்கு பக்கோடா எடுத்துட்டேன் பா.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
140 - சில்லி சீஸ்
140 - சில்லி சீஸ் பராத்தா
டைமன் கட் 1068
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வனி அக்கா
அன்பு வனி அக்காவிற்கு,
கி.கு.6 போட்ட உடனே எல்லா குறிப்பும் பிச்சி பிடுங்கி எடுத்துட்டாங்க. மிஞ்சினதுல நான் செலக்ட் செய்துள்ளேன்.
4. 146 - கோதுமை அல்வா
7. 168 - சர்க்கரை போளி
10. 179 - 7 ஸ்டார் கேக்
12. 190 - தோசைக்கல் கேக்
21. 307 - கோதுமை சமோசா
24. 329 - ராகி டிலைட்
31. 481 - வெஜிடபிள் இட்லி
இது என்னோட லிஸ்ட். இதுல 7 வது சர்கரை போளினு சொல்லி இருக்காங்க. ஆனா உள்ளே செய்முறையில் வெல்லம் தான் யூஸ் பண்ணி இருக்காங்க.
எல்லாம் சில காலம்.....
vidhya
அன்பு வித்யா... தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி :) செய்து அனுப்ப போறீங்க என்பதே மகிழ்ச்சி. காத்திருக்கிறோம், நேரம் எடுத்தாலும் சரி தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாலா
அதனால் என்ன... நாம அதை வெல்ல போளினு பேரு மாத்திக்கலாம் ;) இன்னும் குறிப்புகளின் பட்டியல் வரும் பாலா. கவலையே வேண்டாம். இம்முறை பாலா 6 இல்ல... 20 செய்தாகணுமாம் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிச்சன் குயின்ஸ்
லிஸ்ட் அப்டேட் பண்ணிட்டேன். நீங்க தேர்வு செய்தது சரியா இருக்கான்னு பாருங்க. மற்றவர்கள் உங்களுக்கு முன் தேர்வு செய்ததை நான் அப்டேட் பண்ணல. அதுக்கு பதில் வேறு தேர்வு செய்யவும் ப்ளீஸ் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
bala
பாலா வெஜிடபிள் இட்லி நான் எடுத்துருக்கேன்ப்பா.
Be simple be sample
kq6
433- kulipaniyaaram
177-inji chatni
1722-pudhuvagai fruit salad
1480-chepangizhanu cutlet
mobile la tamil key panna mudiyala. srysry
dhayu
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
முதன் முதலா வனீ
1 ஸ்டஃப்டு வெண்டைக்காய்
2 கேழ்வரகு சாட்ஸ்
3 இளநீர் சோடா
வனி அக்கா
கிச்சன் குயின் வந்தாச்சா. ஆனால் இந்த முறை கலந்து கொள்ள முடியாது. அடுத்த தடவை கலந்து கொள்கிறேன் . கலந்து கொள்ளும் தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள் .
வனீஸ்...
//(கவிதா தயானிதி)// தயா..நி..தி என்று வந்திருக்கணும். எதுக்கும் அவங்கள்ட்ட கேட்டுப் பார்த்துட்டு மாற்றி விடுங்க.
- இமா க்றிஸ்
imma
நீங்க சொன்னது தான் சரி இமா. எனக்கு டைப் மெதட்ல இடையில் அதை வர வைக்க தெரியல, அதனால் பரவாயில்லைன்னுவிட்டேன். இப்போ கண்டு பிடிச்சு மாத்திட்டேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
niki and tharsha
முதன் முதலாக கிச்சன் குயின் பகுதிக்கு வந்திருக்கும் நிகிக்கு வாழ்த்துக்கள் :)
முதன் முதலா இந்த பகுதியில் லீவ் போடும் தர்ஷாக்கு.... என்ன சொல்லலாம்?? ;) எதாவது காரணம் இல்லாமல் தர்ஷா லீவ் போட மாட்டாங்க... அதனால் எல்லாவற்றையும் நல்லபடி முடிச்சுட்டு வாங்க தர்ஷா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
ஐயோ வனி அக்கா.
இம்முறை பாலா 6 இல்ல... 20 செய்தாகணுமாம் ;)
வீடு தாங்காது. இப்பவே முக்கா வாசி நேரம் கிட்சன்ல தான் இருக்கேன். 20னா கிட்சன்லயே தூங்க வேண்டியது தான். மாமியார் வைவாங்க. வேணாம். முடிந்த வரை செய்து அனுப்புகிறேன். செய்றது பெரிய விஷயம் இல்ல. அனுப்ப தான் நேரம் கிடைக்க மாட்டுது.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
தாராளமா ரேவ்'ஸ். இதுல என்ன இருக்கு. நான் இன்னும் எதுமே செய்யல.
எல்லாம் சில காலம்.....
vaany
http://www.arusuvai.com/tamil/node/4548
//4548 - கோதுமை அல்வா (எளிய முறை)
இதோட லிங்க் ஓப்பன் பண்ண முடியல டீம்// - open aagudhu vaany. London deepa prakashnu oruvar recipe.
//கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 1/2 கப்
நெய் - ஒரு கப்
ஏலக்காய் - 2 (தூள் செய்ய வேண்டும்)
கலர் பொடி - தேவைக்கேற்ப
முந்தின நாள் இரவில் கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் ஊற வைத்ததை நன்றாக பிசைந்து பாலை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வடிகட்டிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
கலர் பவுடர் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
நெய் கக்க ஆரம்பிக்கும் போது முந்திரி மற்றும் ஏலப் பொடியும் போட்டு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்
//
- oruvelai seyya aasai pattinganaa... open aagalanna inga copy paste panniruken use pannikanga :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிச்சன் குயின்..
அன்பு வனி, என்னால் கிச்சன் குயின் 5 நான் தேர்ந்தெடுத்த 4 ரெசிப்பியை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செய்ய இயலவில்லை. அதையும் இந்த கிச்சன் குயின் 6ல் இணைக்க முடிந்தால் இணைக்கவும்.
கார மைதா போளி 1274
டைமன் கட் 1068
கடலைமாவு தோக்ளா - 1481
அரிசி வடை 2147
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
கிச்சன் குயின் குறிப்புகள்
வேர்கடலைபொடி 5473
8746 சேனை சிப்ஸ்
கொத்தவரை வத்தல், பொரியல் (7536, 7533) இந்த நான்கு குறிப்புகள் இன்னும் செய்யவில்லை...( செய்ய முடியவில்லை ) இதை இந்த லிஸ்டில் சேர்த்து விடலாம்.......
sumi & priya
Ninga kodutha kurippugalai list la add panniten :) padhivittu theriyapaduthiyamaiku nanrigal.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
அக்கா கிட்சன் குயின் 5 ல்
158. முடக்கத்தான் கம்பு தோசை 1321
கிட்சன் குயின் 6 ல்
20. 275 - அரிசி பருப்பு தோக்ளா
என் பெயர் சேர்க்கவும். இன்று முடக்கத்தான் கீரை கிடைத்தது. உடனே செய்து விட்டேன்.
எல்லாம் சில காலம்.....
சூப்பர் ஃபாஸ்ட் ட்ரெயின்
அன்பு வனி,
கிச்சன் க்வீன் 6 வந்தாச்சா, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன்
சீதாலஷ்மி
குயின்ஸ்
மக்களே... இந்த பகுதியில் வனி ஒழுங்கா வருவதில்லை, போஸ்ட் போடுறதில்லை, அறுசுவையில் ஆளையே காணோம் இப்படி நினைக்கிற எல்லாருக்கும் நான் சொல்றது என்னன்னா... "ப்ளீஸ் இன்னும் 1 வாரம் டைம் கொடுங்க... பள்ளி திறக்கட்டும், வனிக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கேன்" :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா