சளிக்கு

என் 1 1/4 வயது குழந்தைக்கு அடுத்த‌ வாரம் தடுப்பூசி. ஆனால் 2 நாட்களாக‌ சளி இருமல் சீக்கிரம் குணமாக‌ எதவது கை வைத்தியம் சொல்லுஙலென். இப்போதைக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சூடு பண்ணி தேய்த்து விடுகிறென் வெறு ஏதாவது இருந்தால் சொல்லுஙள்

கொழான் தண்ணி எடுத்து முதுகுல, நெஞ்சுல தேய்ச்சு விடுங்க, விக்சு தைலம் அதே மாதிரி தேய்ச்சு விடுங்க.

//கொழான் தண்ணி// சும்மா ஒரு ஆர்வக் கோளாறு... கொழான் தண்ணி என்றால் என்ன?

‍- இமா க்றிஸ்

நான் நினைத்தேன் இமா அம்மா கேட்டு விட்டார்கள்

odi colone... ella baby shop la kedaikum... but france la than original kedaikum... Pondicherry la odi colone sonnale thorium but tamil nadu la athalam use panna matanga athan ungaluku theriala...

கொலோனை நீர் சேர்த்து ஐதாக்கி, சின்னதாக ஒரு துணியில் நனைத்து நெற்றியில் ஜுரம் இறங்குவதற்காகப் போடுவார்கள். காயக் காய துணியை நனைத்து விடுவார்கள். ஸ்பிரிட் ஆவியாகுவதற்கு உடல் வெப்பத்தைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பநிலை குறையும் என்பது விஞ்ஞான விளக்கம்.

நீங்கள் சொல்லும் விபரம் எனக்குப் புதிது.

சின்ன வயதில் செபா என்னை முழுக வைத்தால் [இது இலங்கை முழுக்கு :) ] உச்சியிலும் பிடரியிலும் பேபி கொலோன் தேய்த்து விடுவார்கள். அதனாலெல்லாம் பலன் ஒன்றும் கிடைத்ததாகத் தெரியவில்லை. நான் எப்போதும் மூக்கைச் சிந்திக் கொண்டும் வீஸ் பண்ணிக் கொண்டும்தான் இருந்தேன். கொலோன் தேய்த்ததன் விளைவாக முப்பதாவது வயதில் உச்சியிலும் பிடரியிலும் ஒரு ரூபாய் அளவிற்கு வட்டமாக நரைக்க ஆரம்பித்ததுதான் மிச்சம். :-)

//france la than original kedaikum.// இல்லைங்க. எல்லா நாட்டிலும் பல தரமான ப்ராண்டுகள் விற்கிறார்கள்.

//tamil nadu la athalam use panna matanga.// :-) இமா தமிழ்நாடு இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் யூஸ் பண்ண மாட்டாங்க என்கிறதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யூஸ் பண்ணுவாங்க என்றுதான் நினைக்கிறேன். இலங்கைல அனேகம் குழந்தைகள் இருக்கிற எல்லா வீட்டிலும் இருக்கும்.

//athan ungaluku theriala..// அவ்வ்வ்!!! ;))) நீங்க ஒழுங்காக கொலோன் அல்லது colone என்று முதல்லயே எழுதி இருந்தால் எனக்கு ஏன் சந்தேகம் வருது! :-) கொழான் என்று தட்டி கொழப்பிட்டீங்க. :-)

‍- இமா க்றிஸ்

இது தமிழ்நாட்டுல சாதாரணமா கிடைக்கிற பொருள்தானே.எல்லா மெடிக்கல்ஷாப்லயும் கிடைக்குமே. பாண்டிச்சேரி தமிழ்நாட்டுக்கு நடுவுலதானே இருக்கு.

Be simple be sample

Odi colone kelvi pattiruken. Avanga kozhaan thanninu sonnadhum kozha thanniyai thappaa thattitaanganu ninaichen. Aanaa een kozha thanninu(tap water) manda kaanju pochu :P vani romba makku.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//kozha thanniyai thappaa// அந்த எண்ணத்துல கீ போர்ட்ல n பக்கத்துல y இருக்கான்னு பார்த்தேன். அதுவும் இல்லை. சரி கேட்டுரலாம்னு எழுதிக் கேட்டாச்சு. :-)

‍- இமா க்றிஸ்

நல்ல‌ காலம் நான் கொழா தண்ணி எதுக்குன்னு கேட்காம‌ போனேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

odi colone na thalaila athuvum hair la podave kudathu... ungaluku thappa use pannitanga... colone thanniaa light ah viralla thottu muthugu mattrum nenjila thadavanum... vicks epadi apply pannuvomo athe pola pannanum...

மேலும் சில பதிவுகள்