தேதி: April 24, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சை கடலை - அரை கிலோ
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
பூண்டு - 6 பற்கள்
எண்ணெய் - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலையில் பூச்சிக்கடலை இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பூண்டை தட்டி வைக்கவும். மாவு கலவையை நன்றாக சேர்த்து கலந்து வைக்கவும். கடலையில் லேசாக தண்ணீர் தெளித்து வைக்கவும். (தண்ணீரை கையால் தெளிக்கனும் ஊற்ற கூடாது கடலை முழுவதும் படும் படி தெளித்தால் போதும்)

ஈரம் செய்த கடலையில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும். கடலை முழுவதும் மாவு ஒட்டும் படி பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலையை போட்டு நன்கு வறுப்பட்டதும் எடுக்கவும்.

கடைசியாக கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்க்கவும். சுவையான மொறு மொறு மசாலா கடலை ரெடி.

Comments
ஸ்வா
சூப்பரா இருக்கு. நான் இது வறுத்த கடலையில் செய்வாங்கனு நினச்சிட்டு இருந்தேன். அருமையா இருக்கு.
எல்லாம் சில காலம்.....
swarna
இது எனக்கு மிகவும் பிடிக்கும்.... சூப்பர்
swarna sis
Easy recipe thanks sis
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
நன்றி
எனது குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பாலா
மிக்க நன்றி பாலா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ப்ரியா
மிக்க நன்றி ப்ரியா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மெர்சி
மிக்க நன்றி மெர்சி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா
நல்ல குறிப்பு :) இதேப் போன்று நானும் செய்வேன் ஸ்வர்ணா, என் மகளுக்குப் பிடிக்கும். பூண்டுடன் சோம்பு தட்டி சேர்ப்பேன்.
சுவா
எனக்கு ரொம்ப பிடிக்கும்.பச்சை வேர்கடலை கிடைச்சா செய்து பார்க்கிறேன்
Be simple be sample
சுவா
மசால் கடலை என் மகனுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்
வாணி
வாணி மிக்க நன்றிங்க :) அடுத்த முறை நானும் சோம்பு தட்டி செய்து பார்க்கிறேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவ்ஸ்
ரேவ்ஸ் மிக்க நன்றி :) பொறி,பட்டாணி கடைகளில் எப்பவும் கிடைக்கும் ரேவ்ஸ் கடலை.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நிகி
நிகி மிக்க நன்றி என்னவருக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் இது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.