தேதி: April 25, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கம்பு - ஒரு டம்ளர்
கேழ்வரகு - ஒரு டம்ளர்
பச்சை பயிறு - கால் டம்ளர்
கொள்ளு - கால் டம்ளர்
பச்சை (அ) வறுத்த வேர்க்கடலை - கால் டம்ளர்
கொண்டைக்கடலை - கால் டம்ளர்
பொட்டுக்கடலை - கால் டம்ளர்
சோயா - கால் டம்ளர்
கருப்பு உளுந்து - கால் டம்ளர்
சம்பா கோதுமை - கால் டம்ளர்
மொச்சை - கால் டம்ளர்
பார்லி அரிசி - கால் டம்ளர்
வரகு அரிசி - கால் டம்ளர்
சாமை அரிசி - கால் டம்ளர்
தினை அரிசி - கால் டம்ளர்
சோளம் (விருப்பப்பட்டால்) - கால் டம்ளர்
எள் - ஒரு தேக்கரண்டி
பாதாம் - தேவைக்கேற்ப
பிஸ்தா - தேவைக்கேற்ப
முந்திரி - தேவைக்கேற்ப
ஏலம் - 10 எண்ணிக்கை






விருப்பமெனில் சோயா, மொச்சை போன்றவற்றையும் முளைக்கட்டி சேர்க்கலாம்.
இந்த சத்து மாவு ஒரு வருடம் வரை கெடாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் இன்னும் அதிக நாட்கள் கூட வைத்து இருக்கலாம்.
Comments
பாலா
இந்த சத்து மாவை குழந்தைக்கு எப்படி கொடுக்கனும் அதாவது கஞ்சி மாதிரி கொடுக்கலாமா அல்லது தோசை, அடை போல கொடுக்கனுமா... கொஞ்சம் சொல்லுங்க
பாலா
கருப்பு உளுந்து தான் போடனுமா வெள்ளை குண்டு உளுந்து போட கூடாதா...
பாலா
சூப்பர் பாலா அருமையான சுத்தமான சத்துமாவு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
thanks admin
குறிப்பை அழகாக வெளியிட்ட அறுசுவை டீமிற்க்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
கோகி
இது கஞ்சி மாறி காய்ச்சி கொடுக்கலாம். 1 ஸ்பூன் மாவுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகலின்றி கரைத்து உப்பு சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து நன்கு கைவிடாமல் கிளறி கட்டியாகும் நேரம் பால் சேர்த்து பின் சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து கஞ்சியாக ஆற வைத்து கொடுக்கலாம்.
எல்லாம் சில காலம்.....
ஸ்வர்ணா
நன்றி ஸ்வர்ணா
எல்லாம் சில காலம்.....
கோகி
வெள்ளை உளுந்தும் சேர்க்கலாம். ஆனால் கருப்பு உளுந்தில் உள்ள சத்துக்கள் வெள்ளை உளுந்தில் இல்லை. சாதாரணமாக பல பொருட்களில் தோலிலும் அதை ஒட்டிய மேலோட்டமான உள் பகுதியிலும் தான் அதிக சத்து உள்ளது. கருப்பு உளுந்தை தோல் நீக்கும் போது மிஷினில் உராயும் போது தோலுடன் அதன் மேலோட்டமான உட்பகுதியும் வீணாகி விடுகிறது. நீங்கள் 1/4 கிலோ கறுப்பு உளுந்து வாங்கி வைத்துக் கொண்டால் அடுத்த அடுத்த முறை அரைக்கும் போது உபயோகமாகும்.
எல்லாம் சில காலம்.....
பாலா
உபயோகமான நல்ல குறிப்பு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
நன்றி முசி.
எல்லாம் சில காலம்.....
பாலநாயகி
கடையில விற்க்கப் படும் பிராண்டட் சத்து மாவு வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கவே பயமாயிருக்கு, கலப்படம் இருக்குமோ என்று. இது நிச்சயம் அவசியமான, பயனுள்ள குறிப்பு பாலநாயகி.
பாராட்டுக்கள். :)
வாணி
மிக்க நன்றி வாணி
எல்லாம் சில காலம்.....
10 matha kulandhaiku indha
10 matha kulandhaiku indha sathumaavu kodukalama mam..?
ramya
தோழி தயக்௧மே வேண்டாம்
தாராளமா௧ கொடுக்௧லாம்
ML
பாலநாயகி
அக்கா ஆரோக்கியமான சத்துமாவு குறிப்பு போட்டு இருக்கிங்௧ வாழ்த்துக்௧ள்
ML
Thank u kalyani.
Thank u kalyani.
Thank u kalyani.
Thank u kalyani.
1 tamler na evlo
1 tamler na evlo gram...??solunga pls..ithellam wash pannitu dry pananuma?
ரம்யா
1 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இது செரிக்க சிரமமாகும். 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு கேழ்வரகு, சம்பா கோதுமை, இரண்டும் தலா 1 டம்ளர் பொட்டுகடலை, பச்சைபயிறு, இரண்டும் தலா 1/2 டம்ளர் அப்படியே வறுத்து அரைத்து மாவாக வைத்துக் கொண்டு கஞ்சியாக காய்ச்சி கொடுக்கலாம்.
எல்லாம் சில காலம்.....
கல்யாணி
நன்றி கல்யாணி
எல்லாம் சில காலம்.....
ரம்யா
1 டம்ளர் என்பது ஒரு அளவு. நீங்கள் எந்த பாத்திரத்தில் அளவு எடுக்கிறீர்களோ அதில் கால் பாத்திரத்திற்கு மற்ற பொருளை எடுக்கலாம். உதாரணமாக உங்கள் வீட்டில் உள்ள ஒரு டம்ளரில் (அ) கிண்ணத்தில் ஒரு பொருளை அளந்தால் அதிலேயே பாதி அளவு கால் அளவு அளக்க வேண்டும். இன்னும் விளக்கமாக நீங்களாகவே ஒரு அளவு நிர்ணயிக்கலாம். 1 டம்ளர் 100 கிராம் என்று கணக்கிட்டால் அதில் 1/4 டம்ளர் 25 கிராம் எனவும் 1/2 டம்ளர் எனில் 50 கிராம் எனவும் நாமாக எடுத்துக் கொள்வது தான். 200 கிராம் எனில் 1/4 பங்கு 50 கிராம். 1/2 பங்கு 100 கிராம். இதன் மேல் விளக்கினால் நீங்க குழம்பிடுவீங்க. கரெக்ட் தான?
எல்லாம் சில காலம்.....
பாலநாயகி நீங்க சொன்ன மாதிரி
பாலநாயகி நீங்க சொன்ன மாதிரி நான் சத்துமாவு அரைத்துவிட்டேன்..ஆனால் முளைகட்டவில்லை அதை என் 10 மாதம் முடிந்த என் குழந்தைக்கு கொடுக்கலாமா?PLS சொல்லுங்க மேடம் ...நான் நேத்து அத அவளுக்கு கொடுத்தேன் அவ தண்ணியா 3 முறை BLACK கலர் ல TOILET போகிறாள் எனக்கு பயமாக உள்ளது..நான் ஏற்கனவே என் தோழி சொல்லிய முறையில் கேழ்வரகு,கம்பு ,சோளம் ,பொட்டுகடலை ,நிலகடலை,கோதுமை,ஜவ்வரிசி ,பாதாம்,முந்திரி,கார்அரிசி இதெல்லாம் கொடுத்துருக்கேன்..சோ இத நான் கொடுக்கலாமா? வேண்டாமா ?தயவு செய்து சொல்லவும்..என் மகளுக்கு 1 வாரமாக LOOSE MOTION ப்பல் இருந்தது 2 நாளாக NORMAL AH இருந்த இப்போ இப்படி இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க..
ரம்யா
தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் இப்போது தான் பார்த்தேன். நான் கூறிய கேழ்வரகு சம்பா கோதுமை பொட்டு கடலை பச்சை பயறு சேர்த்து அரைத்த இந்த சத்து மாவு தாளாரமாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு கொடுக்கலாம். இது முளைகட்டி அரைத்தால் எளிதில் செரிக்கும். சத்து சிறிது அதிகமாக கிடைக்கும். ஆனால் முளைகட்டாமலும் அரைக்கலாம். அதனால் எந்த ப்ரச்சனையும் இல்லை. கறுப்பா மோஷன் போனா சளி புடிச்சி இருக்கும், இல்லனா வயறு சரியில்லை ஏதோ ப்ரச்சனையாக இருக்கும். குடுத்த ஒரு நாளிலே இது போல் ஆக வாய்ப்பில்லை. வேறு காரணத்தால் கூட லூஸ் மோஷன் ஆகி இருக்கலாம். இப்போ எப்படி இருக்காங்க குட்டீஸ்?
எல்லாம் சில காலம்.....
Balanayagi
Balanayagi madam...mannikkavum ipothudan ungal pathivai pathen...
Neengal sonnadhu pol en kulandhaiku sathumaavu kodukiren...athu koduthaldan oruvelayavathu sathulla unavu kodutha thripthi enaku kidaikum
..thank u...
Balanayagi
Balanayagi madam...mannikkavum ipothudan ungal pathivai pathen...
Neengal sonnadhu pol en kulandhaiku sathumaavu kodukiren...athu koduthaldan oruvelayavathu sathulla unavu kodutha thripthi enaku kidaikum
..thank u...
ரம்யா
நன்றி ரம்யா. பதிவிட்டமைக்கு. இன்னும் முடிந்தால் சாயங்கால நேரத்தில் பொட்டுகடலை வெல்லம் இரண்டும் கலந்து கொடுங்கள். கடிக்க முடியாது எனில் பொட்டுகடலையை மாவாக்கி அதனுடன் வெல்லம் கலந்து கொடுக்கலாம். இது குழந்தைக்கு மிக சத்தானது. பேரீச்சம் பழம் காய்ந்த திராட்சை ஆகியவற்றை சூடான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து பாலை மட்டும் வடிகட்டி தரலாம். பேரீச்சை திராட்சையின் சத்து பாலில் இறங்கி விடும்.
எல்லாம் சில காலம்.....