3 வயது கொழந்தை எப்படி பேசுவாங்க ??

ஹாய் தோழிகளே,

எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து பதில் கொடுங்கள் , என் தோழி அவங்க பொண்ணு கு 3 வயது , அவங்க ஸ்கூல் போறாங்க, நல்ல பேசுறாங்க அண்ட் ஸ்டோரி சொல்லுவாங்க பட் அவங்க பேசும் போது சில வார்த்தைகள் கஷ்ட படுற சொல்றதுக்கு for ex ச்ச்ச்ச்சண்ட , ச்ச்சொல்லூங்க , இப்படி சில வோர்ட்ஸ் சொலும் போது டைம் எடுக்குற , லைக் திக்கி திக்கி, இது நோர்மலா , இந்த ஏஜ் ல இப்படிதான் பேசுவாங்கள? எப்போ சரியாய் பேசுவாங்க ? கவலை பட வேணாமா ?
ப ்ளீஸ் பதில் கொடுங்க எனக்கு , நன்றி அறுசுவை tholiz

//3 வயது// தானே! //நல்லா பேசுறாங்க அண்ட் ஸ்டோரி சொல்லுவாங்க// பிறகு என்ன? இதை இப்போதைக்கு இப்படியே விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.

//இது நோர்மலா// & //இந்த ஏஜ் ல இப்படிதான் பேசுவாங்கள?// :-) வேறு பிள்ளைகளிடம் இப்படிக் காணாததால்தானே நீங்கள் இங்கு கேள்வியை வைத்திருக்கிறீர்கள்? இப்படியும் பேசலாம், புரியாத அளவு மழலையாகவும் பேசலாம். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க.

//எப்போ சரியாய் பேசுவாங்க?// இன்னும் காலம் இருக்கிறது.

//கவலை பட வேணாமா?// இப்போதைக்கு வேண்டாம். குடும்பத்தார் எப்போ இது பிரச்சினையாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ அப்போது என்ன செய்யலாம் என்பதை யோசிக்கட்டும். இப்போது நன்றாக பேசும் பிள்ளையைத் திருத்துவதாக நினைத்து திரும்பத் திரும்பச் சொல்ல வைத்தால், "பேசினால் தானே இப்படிக் கொடுமை பண்றாங்க. அமைதியாக இருப்போம்," என்று பேச்சைக் குறைத்துக் கொள்ளலாம். சரியாகப் பேசும் சமயம் என்கரேஜ் பண்ணலாம். மற்றப்படி.. இதையிட்டு பெரியவர்கள் குழந்தையின் முன்னால் பேச வேண்டாம். கவலைப் படுவதாகக் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். இதை ஒரு குறையாகக் குழந்தை நினைத்து விடக் கூடாது. மெதுவே குழந்தையின் வளர்ச்சியோடு தானாகச் சரியாகலாம். விட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

தலைப்பை உரிய விதமாக மாற்றி விடுங்கள் சகோதரி. பின்னால் யாராவது தேடினால் கண்ணில் படும்.

‍- இமா க்றிஸ்

இது பல‌ குழந்தைகளுக்கும் உள்ள‌ ப்ரச்சினை தான்... பயம் வேண்டியதில்லை... எனது குழந்தையும் இது போல‌ தான் பேசுகிறான்... நான் பேச்சுபயிற்சி மருத்துவரிடம் காட்டியபோது இது திக்கி பேசுவது அல்ல‌... சிறு குழந்தைகள் நடக்க‌, நிற்க‌ ஆரம்பிக்கும் போது எப்படி தடுமாறுமோ அப்படி இதுவும் பேச்சு தடுமாற்றம் தான்... ஆனால் குழந்தை முன்னால் "நீ இப்படி பேசாதே", என்றும் "அவன் திக்கி பேசுறான்" என்றோ குறிப்பிடவே கூடாது... அது அவன் மனதில் பதிந்து விடும்... அவன் பேசும் போது அதை கண்டுக்காமல் சிறிது நேரம் கழித்து அந்த‌ வார்த்தைகளை மெதுவாக‌ உச்சரிக்க‌ சொல்லி தாருங்கள்... வாக்கியங்களாக‌ சொல்லாமல் ஒவ்வொரு வார்த்தையாக‌ சொல்லி தர‌ணும்... eg. என் பெயர்,தரணீ, என் அம்மா, பெயர், பிரியா,... இப்படி கமா போட்ட‌ இடத்தில் நிறுத்தி நிறுத்தி சொல்லி தரணும்... ஸ்கூல் சென்றால் சரி ஆகி விடும்... இதெல்லாம் மருத்துவரின் ஆலொசனைகள்... இது தவிர‌ தினமும் காலை நாக்கில் சுத்தமான‌ தேனை தடவி விடலாம்... இது வீட்டுவைத்தியம்....

சின்ன குழந்தை தானே கவலைப் பட வேண்டாம்.தேன் சிறந்த மருந்து,கொடுத்துப் பாருங்கள்

ஹாய் இமா மாம் , ரொம்ப ரொம்ப நன்றி , நீங்க சொன்ன போலவே , (( கவலைப் படுவதாகக் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். இதை ஒரு குறையாகக் குழந்தை நினைத்து விடக் கூடாது.)) நானும் என் தோழி இடம் சொனேன், அவங்க அப்பா தான் இப்டி பேசு அப்படி பேசு நு சில நேரம் வோர்ட்ஸ் கரெக்ட் பண்ணுவாரு நு சொல்லிருக்க ... இம மாம் சில கிட்ஸ் அவங்க அம்மா attention பண்றதுக்கு கூட இப்டி பேசுவாங்கள ?? இது நான் உங்க கிட்ட கேக்குறேன் .
உங்க பதிலா நா கோப்பி பண்ணி வைச்சுருக்கேன் , அழகான பதில் இம மாம். தேங்க்ஸ் எ லோட் , எனக்காக டைம் எடுத்து பதில் போட்டதுக்கு உங்களுக்கு என் நன்றி .

பிரியா சிஸ்டர் தங்க யு சோ மச் , உங்க பதிலும் ரொம்ப அழகானது , நாக்கில் தேன் தடவி விடுறாங்க நு நெனக்குறேன் சிஸ்டர், தேங்க்ஸ் again .

பர்வின் தேங்க்ஸ் a lot for your sweet reply too

nan inda pahudikku pudiyawal anaku help pannugale nanum appadi inda pahudi il kelvi keklam anru.

//கிட்ஸ் அவங்க அம்மா attention பண்றதுக்கு கூட இப்டி பேசுவாங்கள ??// அப்படியும் இருக்கலாம். :-) அந்த மாதிரி இருந்தால் நிச்சயம் அம்மாவுக்குப் புரியும். :-)

மாம்லாம் வேணாம். இமா மட்டும் போதும். ம்... ஒரு இடத்துல இமாவுக்கு காலைக் காணோம். ;) பரவால்ல, தமிழ்ல தட்டினதால மன்னிச்சு விட்டுருறேன். ;)))

‍- இமா க்றிஸ்

மீண்டும் நன்றி இமா , நான் இபோ தான் lkg கிட்ஸ் , என்ன சொல்ல வரேன்ன , ட்ய்பிங் இன் தமிழ் இபோ தான் கதிகிடேன் ஆக்கும் :)))), தப்பு இருந்த அட்ஜஸ்ட் பணிகொங்க . நன்றி நன்றி ( எனக்கு எதாவது சந்தேகம் கேக்கணும் போல ந நீங்க கண்டிப்பா பதில் கொடுக்கணும் , என்ன இமா கொடுப்பீங்க தானே , இமா கொடுப்பாங்க :)) ஷி is one of the queen of அறுசுவை :) ( என்ன புள்ள இப்படி சொலிட்டு போகுதுன்னு யோசிகதேங்க , எல்லாம் ஒரு அன்பு வேண்டுகோள் :)

என் 2 வயது 6 மாதம் மகன் பேசும் போது திக்கி திக்கி பேசரான் எனக்கு ரொம்ப‌ கஷ்டமா இருக்கு என்ன‌ பன்ரதுன்னு தெரியல‌ பேசும் போது முதல் வார்த்தை மட்டும் ரொம்ப‌ திக்குரான் தயவு செய்து எனக்கு உதவவும்

என் 2 வயது 6 மாதம் மகன் பேசும் போது திக்கி திக்கி பேசரான் எனக்கு ரொம்ப‌ கஷ்டமா இருக்கு என்ன‌ பன்ரதுன்னு தெரியல‌ பேசும் போது முதல் வார்த்தை மட்டும் ரொம்ப‌ திக்குரான் தயவு செய்து எனக்கு உதவவும்

அன்புள்ள‌ உஷா உங்கள் பதிவைக் குறித்து>>> அறுசுவையில்
குழந்தைகள் தலைப்பில் போய்ப் பாருங்கள். நிறைய‌ பதிவுகள் உள்ளன‌. அவை எல்லாவற்றையும் நன்றாகப் படித்துப் பாருங்கள்.
அதன் பின் உங்கள் பயம் ஒன்றுமே இல்லை என்பது புரியும்.
பிறகு பாருங்கள். அதுவரையில் குழந்தையிடம் முகத்தில் கடுமையைக்
காட்டாதீர்கள். பதிவுகளைப் படித்துவிட்டு யோசியுங்கள். நிறைய‌
இருக்கிறது பழைய‌ பதிவுகளில்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்