தேதி: April 27, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இட்லி அரிசி - 6 கப்
கறுப்பு (அ) முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்
மாவு ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)











நைலான் ஜவ்வரிசியை விட மாவு ஜவ்வரிசி தான் இட்லிக்கு நன்றாக இருக்கும்.
உளுந்துடன் சரியான அளவு தண்ணீர் (2 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி போதுமானது) சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்த்தால் மாவு நீர்க்க இருக்கும். அப்படி உளுந்து மாவு நீர்க்க அரைத்து விட்டால் அரிசி மாவை சற்று கெட்டியாக அரைத்து எடுக்கவும்
உளுந்தை 2 ஈடாக அரைக்கும் போது நிறைய உபரி வரும். அப்படி அரைக்க தெரியாதவர்கள் 4 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து சேர்க்கலாம்.
இட்லி பானையில் தண்ணீர் கொதித்த பின் இட்லி ஊற்றவும். இட்லி ஊற்றும் போது ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்.
இட்லியை சரியான அளவு வேக விடவும். அதிகமாக வேக விட்டால் அடைந்த மாதிரி ஆகி விடும். 10 முதல் 15 நிமிடங்கள் போதுமானது.
வழக்கமான இட்லி மாவு முறை தான். இதில் மாவு ஜவ்வரிசி சேர்ப்பது மட்டும் புதிது.
Comments
bala
Idly super. Kushbu idly ku aamanaku serpaanganu ketiruken... javvarisi mattume serpadhu pudhidhu.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
balanayagi enaku romba
balanayagi enaku romba usefull enaku idly nallave varathu.unga idly romba softa parthathum sapidathonuthu thanks
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
இந்த இட்லிக்கு ஜவ்வரிசி போட்டலே போதும். மாவிலேயே வித்யாசம் தெரியும். நல்ல சாஃப்டாக (நுரை ) பஞ்சு மாறி இருக்கும். இட்லி சூப்பரா வரும்.
எல்லாம் சில காலம்.....
நிஷா
இட்லிக்கு மாவு அரைப்பதில் தான் பக்குவம் உள்ளது. உளுந்து அரைக்கும் போது பக்கத்தில் நின்று அரைக்கவும். குறைந்தது 15 நிமிடம் அரைக்க வேண்டும். இது மாறி செய்து பாருங்க சூப்பரா வரும்.
எல்லாம் சில காலம்.....
பாலா
இதுபோல அழகான இட்லிசுடற வரைக்கும் எனக்கு தூக்கமே வராது.அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு
Be simple be sample
பாலா
மாவை தூக்கி ஊற்றனுமா? புதுசா இருக்கே
இனி ஜவ்வரிசி சேர்த்து செய்யனும். சூப்பர்
ரேவ்'ஸ்
நன்றி ரேவ்'ஸ் அடுத்த தடவ மாவு அரைக்கற அப்போ ஜவ்வரிசி சேருங்க. இட்லியும் சூப்பரா வரும். அப்றம் தூக்கமும் சூப்பரா வரும்.
எல்லாம் சில காலம்.....
நிகி
ஆமாம் நிகி. நீங்க உங்க நார்மல் மாவுலயே அப்டியே தூக்கி ஊற்றி பாருங்க. அமுக்கி ஊற்றுவதற்கும் தூக்கி ஊற்றுவதற்கும் வித்யாசம் தெரியும்.
எல்லாம் சில காலம்.....
இட்லி
குஷ்பூ இட்லி மல்லிகைப் பூ மாதிரி நல்லா இருக்கு பாலா :))
bala
Innaiku enga veetil kutty kushbu dhaan ;) mixie la potume nallaa vandhirukku. Thanks for the recipe bala.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாணி
நன்றி வாணி. அதான் குஷ்பூவும் மல்லிகை பூ மாறி இருக்காங்களோ? ஹிந்தில குஷ்பூ னாலே வாசனை தான? அப்போ மல்லிகை பூ தான்.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
குட்டி குஷ்பூ இட்லியா? அப்டினா ஹன்சிகா இட்லினு சொல்லுங்க. அவங்க தான் குட்டி குஷ்பூ. இதுவும் கூட பேர் நல்லா இருக்கு. வனி அக்கா பாராட்டினா வையகமே பாராட்டின மாறி. நன்றி அக்கா.
எல்லாம் சில காலம்.....
பாலா
குஷ்பு இட்லி ச்சும்மா கும்முன்னு இருக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா
**ச்சும்மா கும்முன்னு இருக்கு**
குஷ்பூ மாறியேவா? நீங்க இந்த இட்லி உங்க வீட்லயும் பண்ணுங்க. உங்க வீட்டுக்கும் குஷ்பூ வருவாங்க (ச்சும்மா கும்முனு).
எல்லாம் சில காலம்.....
இட்லி..
பாலநாயகி, இட்லி மாவு பொங்கியதும் இட்லி ஊற்றும்போது தண்ணீர் சேர்த்து கலக்கி அப்புறமாக இட்லி ஊற்றுவீர்களா?? ஏன் கேகக்றேன்னா //ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்.// என்று சொல்லியிருக்கீங்க..நான் அரைத்துவைக்கும் மாவு பொங்கியதும் கரண்டியால் எடுத்து ஊற்றும்படியாக இருக்காது, மாவை கலக்காமல் அப்படியே அள்ளி எடுத்து இட்லி தட்டில் ஊற்றித்தான் நான் இட்லி செய்வது வழக்கம். [இட்லி சாஃப்டாத்தான் வரும்னு வைங்க..இருந்தாலும்..,] "இட்லி ஊற்றும் போது ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்."-ந்னு நீங்க சொல்வதைப் பார்த்து ஒரு க்யூரியாஸிட்டி!! :) டைமிருக்கும்போது பதில் சொல்லுங்க. நன்றி!
அன்புடன்,
மகி
மகி
இட்லி மாவு நன்கு பொங்கி இருக்கும். அப்படியே நன்கு கலக்கி இட்லி ஊற்றலாம். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தோசைக்கு தான் மாவு நீர்க்க இருக்க வேண்டும். இட்லிக்கு சற்று கட்டியாக தான் இருக்க வேண்டும். எனவே தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அப்படியே நன்கு கலக்கி ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும். கலக்காமல் ஊற்றும் போது புளித்து உளுந்து மாவு மேலே இருக்கும். அரிசியின் மாவு அடியில் தங்கி அடி மாவின் இட்லி சிறிது அழுத்தமாக இருக்கும்.
எல்லாம் சில காலம்.....
நன்றி..
நன்றி பாலநாயகி!
அன்புடன்,
மகி
குஷ்பூ இட்லி
நீங்க சொன்னது போல் இட்லி செய்தேன் நன்றாக இருந்தது நன்றி
nasreengani
குறிப்பை செய்து பார்த்து கருத்து வெளியிட்டமைக்கு நன்றி நஸ்ரின்.
எல்லாம் சில காலம்.....
ஜவ்வரிசி
எப்பொழுதும் மாவில் ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம். இல்லை விசேசங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தனுமா. அப்படி எப்பொழுதும் சேர்த்துக்கொண்டால் எந்த சைடுஎபைக்டும் இல்லையா
எல்லாம் நன்மைக்கே