மட்டன் பிரியாணி (6 மாத குழந்தைக்கு)

தேதி: April 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

அரிசி - கால் கப்
எலும்பில்லாத மட்டன் - 4 துண்டுகள்
தயிர் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - கால் தேக்கரண்டி
அரைக்க :
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - பாதி (விதை நீக்கியது)
இஞ்சி - கால் அங்குலத் துண்டு
பூண்டு - ஒன்று
புதினா இலைகள் - 5
மல்லி இலை - 3 தண்டிலுள்ள இலைகள்


 

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்தவற்றை போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் தயிர் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடியிட்டு மட்டனை வேக வைக்கவும். மட்டன் வெந்ததும் திறந்து கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து குக்கர் வெயிட் போட்டு மேலும் 15 நிமிடங்கள் வேக விடவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியை திறந்து ஒரு கரண்டி அல்லது மத்தினால் சாதம் மற்றும் மட்டனை மசிக்கவும்.
பிரியாணி ரெடி. நெய் கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.

இந்த பிரியாணியை 6 மாதம் முதலே குழந்தைக்கு ஊட்டி பழக வேண்டும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, மல்லி மற்றும் புதினா சேர்த்திருப்பதால் குழந்தைக்கு மலச்சிக்கல் வராது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஒவ்வொன்னும் குழந்தைக்காக யோசிச்சு செய்து குடுக்கறிங்க. சூப்பரா இருக்கு.

Be simple be sample

அருமையா இருக்கு பிரியாணி. உங்களுக்கு 6 மாத‌ குழந்தை இருக்கா? 6 மாத‌ குழந்தைக்குனு இவ்ளோ யோசிக்கறீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

Vaany akka..6 month babyku matton kodukalama?enaku 9 month baby irukka nan innum matton sekkala..ithu kodukalama paal kuda innum molaikala..

நன்றி ரேவதி. குழந்தைக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும். அதே சமயம் போரடிக்காமலும் இருக்கணுமே. நமக்கே வெரைட்டியா சாப்பிட்டாத்தான் நாக்கு ஏற்றுக் கொள்கிறது. குழந்தைகளும் நம்மைப் போலத்தானே :))

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரைக்கும் கொஞ்சம் மெனக்கெட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்துட்டா, ஒரு வயதுக்கப்புறம் நாம் சாப்பிடும் எல்லா சாப்பாடும் அவங்களுக்கு பழகிடும்.
நன்றி பாலநாயகி. இப்போ என் குழந்தைக்கு 10 மாதம்.

\\6 month babyku matton kodukalama?//
கொடுக்கலாம். இன்னும் சொல்லப் போனால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தவழ ஆரம்பிக்கும் பருவத்தில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் :)

\\paal kuda innum molaikala..//

அதினால் தான் மசித்து கொடுக்கிறோம் ரம்யா.
இந்த பிரியாணிக்கு அரிசி மற்றும் மட்டன் வேக வைக்க அதிக தண்ணீர் சேர்ப்பதால் நங்கு குழைய வெந்து விடும். பின் கரண்டி அல்லது மத்தினால் மசித்து கொடுக்க வேண்டும். மட்டன் மட்டுமல்லாது முட்டை, கோழி, மீனும் உணவில் சேர்க்க வேண்டும். ஏற்கனவே உங்கள் குழந்தை காய்கறி கலந்த பருப்பு சாதம், கிச்சடி உண்டு வந்தால் நிச்சயம் இந்த பிரியாணியும் விரும்பும் :)