மட்டன் சூப்

தேதி: April 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மட்டன் எலும்பு - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது


 

மட்டன் எலும்புடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு, ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக‌ வைக்கவும். (குக்கரில் அதிக தீயில் வைத்து 2 விசில் மற்றும் மிதமான தீயில் வைத்து 2 விசில் வைத்து வேகவிட்டால் நன்கு வெந்து விடும்.)
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான‌ உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வேக வைத்த‌ எலும்பு துண்டுகளை ஸ்டாக்குடன் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சூடான‌ சுவையான‌ மட்டன் சூப் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அறுசுவை டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

Muttun soup super balanayaki

Step by step pa alaga easy ya purinjukira mathiri
Eruku

Super

Vasanai summa alluthu ponka

ML

நன்றிகள் பல‌ கல்யாணி. வாசனை மட்டும் இல்ல‌ டேஸ்டும் அல்லும். இன்னொரு கரண்டி இன்னொரு கரண்டினு கேப்பாங்க‌ பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

எங்க வீட்டுக்கு பிடிச்சு சூப். இப்படித்தான் நானும் வைப்பேன் சூப்பர்

Be simple be sample

எனக்கு பிடிச்ச மட்டன் சூப் சூப்பர் :) நானும் இதே மாதிரிதான் செய்வேன் கொஞ்சம் தேங்காய் அரைத்து சேர்ப்பேன் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ரேவ்ஸ்.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்காய் அரைத்து சேர்த்தால் அது டேஸ்ட் சூப்பரா இருக்கும். இது அதிலிருந்து கொஞ்சம் மாறும். இது மிளகு காரம் நன்கு தனியே தெரியும். இது மாறியும் ட்ரை பண்ணி பாருங்க‌. ஈஸியும் கூட‌.

எல்லாம் சில‌ காலம்.....

மட்டன் சூப் செய்தேன். என் குட்டீஸ்க்கு ரொம்பப் பிடித்திருந்தது பாலநாயகி. தேங்க்ஸ் .

நன்றி வாணி. எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். எங்க‌ வீட்டு குட்டி சூப் செய்தால் நிறைய‌ சாப்பிடும்.

எல்லாம் சில‌ காலம்.....