ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)

தேதி: April 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

ஓட்ஸ் - 2 தேக்கரண்டி
ஸ்ட்ராபெர்ரி - 2
பால் - கால் கப் ( ஃபார்முலா பால்)


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரியை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் ஒரு நிமிடம் சூடாக்கி விட்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
ஓட்ஸ் வேகும் வரை கைவிடாமல் (அடிப்பிடிக்காதிருக்க) கிளறவும்.
ஓட்ஸ் வெந்ததும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து கலந்து விடவும்.
சுவையான ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் தயார். குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இதை காலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம்.

குழந்தைக்கு எவ்வித பாலை ஏற்கனவே பயன்படுத்துகிறோமோ அதே பால் மட்டுமே பயன்படுத்தவும்.

ஃபார்முலா பால் அல்லாது தாய்ப் பால் மட்டுமே கொடுக்கும் பட்சத்தில் தாய்ப் பால் பயன்படுத்தியும் போரிட்ஜ் தயாரிக்கலாம்.

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதற்குப் பதில் திட உணவு தொடங்கும் போதே இப்படி பழங்களை கொடுத்துப் பழகி விட்டால், பின்னாளில் குழந்தைகள் பழங்கள் உண்ண மறுப்பதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்