கேழ்வரகு பால்

தேதி: May 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கேழ்வரகு - அரை கப்
தேங்காய் - அரை மூடி
உப்பு ‍- கால் தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
சர்க்கரை - தேவைக்கேற்ப‌


 

கேழ்வரகை 2 மணி நேரம் ஊற‌ வைக்கவும். ஊற‌ வைக்காமல் அப்படியே சேர்த்தும் செய்யலாம். ஊற‌ வைத்தால் பால் கெட்டியாக கிடைக்கும். இதனுடன் தேங்காய்த் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று அரைத்து பின்னர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் நன்கு மசியும்).
அரைத்தவற்றை தேங்காய் பால் எடுப்பது போல் பிழிந்து வடிகட்டவும். ஒரு முறை பிழிந்த சக்கையுடன் மீண்டும் தண்ணீர் சேர்த்து பிழியவும். இது போல் 3 அல்லது 4 முறை பிழியவும்.
இந்த‌ பாலுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
பால் சற்று திக்கான‌ பதம் வரும் வரை காய்ச்சவும். மிகவும் திக்காக‌ விடாமல் உடனே அடுப்பை நிறுத்தவும். பால் ஆற‌ ஆற‌ இன்னும் திக்காகும்.
பாலுடன் ஏலப்பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பாலை ஆற வைத்து குடிக்கவும். சுவையான‌ சத்தான‌ கேழ்வரகு பால் கஞ்சி தயார்.

இந்த‌ கஞ்சியில் வெல்லமும் சேர்க்கலாம். ஆனால் வெல்லத்தை விட‌ சர்க்கரை சேர்ப்பது தான் சுவையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான சுவையான பால் அப்படியே எனக்குதான் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஸ்வா. உங்களுக்கு இல்லாமலா? ஃபுல் கிளாஸ் எடுத்துக்கோங்க‌. பத்தலனா இன்னும் கூட‌ செய்து தரேன். வீட்டுக்கு வாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

கேழ்வரகு பால் எனக்கு புதுசா இருக்கு,
கண்டிப்பா ட்ரை பண்றேன்...
எல்லா போட்டோவும் பளிச் அன்ட் கிளியரா இருக்கு.
இது சுகர் பேஸன்ட்ஸ் சாப்பிடலாமா? தேங்காய் மிக்ஸ் பண்ணிருக்காதல சாப்பிட கூடாதுனு நினைக்கிறேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எல்லாருமே கண்டிப்பா சாப்பிடலாம். சுகர் பேஷ்ண்ட்ஸ் சர்க்கரைக்கு பதிலாக‌ வெல்லம் கலந்து சாப்பிடலாம். தேங்காய் உடலுக்கு ரொம்ப‌ ஹெல்தி. நிறைய‌ சத்துக்கள் தேங்காயில் உள்ளன‌. பச்சையாக‌ சாப்பிட்டால் தேங்காயில் உள்ள‌ சத்துக்கள் அப்படியே கிடைக்கும். அதை சூடு செய்யும் போது கொதிக்க‌ வைக்கும் போது அது கொழுப்பாக‌ மாறும். ஆனால் இதில் அதிகம் கொதிக்க‌ வைக்காததால் தேங்காயின் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இது உடலுக்கு மிக‌ நல்லது. காலையில் எழுந்த‌ உடன் காபி டீக்கு பதிலாக‌ தினமும் இதை குடித்தால் அவ்வளவு நல்லது. கேழ்வரகில் கால்சியம் இரும்பு நிறைய‌ உள்ளது.

எல்லாம் சில‌ காலம்.....

சுபி அப்படியே உங்களுக்கு பயமாக‌ இருந்தால் தேங்காய் சேர்க்காமலும் சாப்பிடலாம். கேழ்வரகு மட்டும் அரைத்து பால் எடுத்து காய்ச்சி இறுதியாக‌ பசும்பால் அல்லது தேங்காய் பால் கலந்தும் குடிக்கலாம். தேங்காய் பாலோ பசும் பாலோ குளிர்ச்சிக்காக‌ மட்டுமே சேர்க்கிறோம். கேழ்வரகு சூடு. அந்த‌ சூட்டை குறைக்கவே சேர்க்கிறோம். மற்றபடி பசும்பால் சேர்த்தும் பருகலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

நீங்கள் கொடுத்து இருக்கும் கேழ்வரகு பால் சளிக்கு மிகவும் நல்லது,
எப்படி ஊற்றுகின்ற‌ சலதோசமாக‌ இருந்தாலும் சுமாராக‌ அரை மணியில் சலதோசம் கட்டுப்படும். ரன்னிங் நோஸ் வெகுவிரைவில் கட்டுப்படும். தேங்காய் சளியைமுறித்துக் கட்டுப்படுத்தும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி பூங்கோதை. நீங்க‌ கேழ்வரகு பாலின் நன்மைகள் பற்றி அழகா சொல்லி இருகீங்க‌. நான் இதை சொல்ல‌ மறந்து விட்டேன். இது மிகவும் சுவையாக‌ இருப்பதால் குடிக்கவும் நன்றாக‌ இருக்கும். இதன் பயன்களும் அதிகம். அனைத்தையும் விட‌ மிக‌ சத்தானது. மீண்டும் நன்றிகள் பூங்கோதை.

எல்லாம் சில‌ காலம்.....