எனது மகன்

எனத் மகனுக்கு 2 வயது தான் ஆகின்றது.4 வருடங்களுக்குப்பிறகு கிடைத்த மகன்.சரியான குழப்படி அவன் குழப்படிக்கு அளவே இல்லை சில நேரம் அடித்தும் வைத்து விடுவேன்.எதை செய்ய வேண்டாம் என்று சொல்கின்றோமோ அதை தான் செய்வான் அவன் குழப்படி இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே

எனது 3 வயது குழந்தையும் இப்படிதான் செய்கிறது ..வீட்டை திருடன் வந்து திருடியது போலவே கலைத்து போடுகிறது ...அடக்கவே முடியவில்லை ...அடித்தால் தான் பயபடுகிறது அடிப்பார்கள் என்ரு உணருவதில்லை ... செய்யாதே என்று சொனால் மதிக்கவே மாட்டேன்கிறாள் ...வா போ சில நிமிடத்தில் வாடி போடி என்கிறது ...3 வயது முடியமால் play schoolக்கு அனுப்ப முடியவிலலை... எங்கே சென்றாலும் குறும்பு செயகிறது.. இப்படி கையாள்வது என்று கூறுங்கள்...

/எதை செய்ய வேண்டாம் என்று சொல்கின்றோமோ அதை தான் செய்வான்// இது மனித இயல்பு. ;) ஆதாம் ஏவாளை ஆப்பிளைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்லாமல் வேறு மரத்தைக் காட்டி, "அது மிகவும் நல்லது. நிறையச் சாப்பிடுங்கள்," என்று சொல்லியிருந்தால் ஆப்பிளைச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். :-)

//அவன் குழப்படி இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே// முதலில்... //சரியான குழப்படி அவன் குழப்படிக்கு அளவே இல்லை// என்னாமல், என்ன செய்கிறார் என்பதைச் சொல்லுங்கள். பிறகு பதிலை யோசிக்கலாம்.

//சில நேரம் அடித்தும் வைத்து விடுவேன்.// அப்படியானால்... நீங்கதான் குழப்படி. :-) நீங்கள் குழந்தையோடு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? அந்தச் சமயங்களில் இருவரும் என்னென்ன செய்வீர்கள்??
~~~~~~~
//எனது 3 வயது குழந்தையும் இப்படிதான் செய்கிறது// அவங்கதான் என்ன செய்கிறது என்றே சொல்லவே இல்லையே சரா! நீங்கள் எப்படி அதையேதான் உங்கள் குழந்தையும் செய்கிறது என்கிறீர்கள்!!!

//.வீட்டை திருடன் வந்து திருடியது போலவே கலைத்து போடுகிறது // அது குழந்தையின் இயல்பு. குழந்தைக்குப் பொழுது போகவில்லை. அதனால்தான் இப்படி இருக்கிறார். //அடக்கவே முடியவில்லை// தப்பு பண்றீங்க. அடக்க நினைக்காமல் ஏன் இப்படி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் குழந்தையோடு எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள்?

//அடித்தால் தான் பயபடுகிறது// குழந்தை அம்மாவுக்குப் பயப்படுவது ஆரோக்கியமான விடயம் என்று நினைக்கிறீர்களா? குழந்தையைப் பயமுறுத்துவதைப் பெருமையாக நினைக்கிறீர்களா? //அடிப்பார்கள் என்ரு உணருவதில்லை// ;(( கர்ர்... அப்போ அடிப்பது நியாயம், அதுதான் சரி என்று சொல்கிறீர்களா? ;(

//செய்யாதே என்று சொனால் மதிக்கவே மாட்டேன்கிறாள்// சொல்லாதீங்க. வேறு எதையாவது ஒரு வேலையைக் கொடுத்து அதைச் செய்யச் சொல்லுங்க. அதற்கு சின்னதாகச் சன்மானம் கூடக் கொடுக்கலாம்.

//வா போ சில நிமிடத்தில் வாடி போடி என்கிறது// யாரையோ பார்த்துப் பழகி இருக்கிறது. நீங்களும் உங்கள் கணவரும் ஒருவரை ஒருவர் இப்படிப் பேசுவது உண்டா? வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாராவது இப்படிப் பேசுவது உண்டா? அது தப்பு இல்லை. அதே போல குழந்தை சொல்வதுவும் தப்பு இல்லை. குழந்தைகள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக் கேட்டேதான் பேச்சையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். சுற்றி உள்ளவர்கள் தமிழ் பேசினால் குழந்தையும் தமிழ் பேசும்; இந்தி பேசினால் இந்தி பேசும். வாடி போடி என்பது பிடிக்காவிட்டால் அப்படிப் பேசுபவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்த ஆளிடம், "குழந்தை முன்னால் இப்படிப் பேச வேண்டாம்," என்று சொல்லுங்கள்.

//எங்கே சென்றாலும் குறும்பு செயகிறது.// என்ன குறும்பு! எங்காவது போகும் சமயம் சின்னவருக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் அல்லது வரைவதற்குப் புத்தகம், கலர் இப்படி ஏதாவது எடுத்துப் போங்கள். "செய்ய வேண்டாம்," என்பதை விட, "நல்ல மாதிரி இருந்து போகிற இடத்தில் நல்ல பிள்ளை என்று பேர் வாங்கினால் கிஃப்ட் கிடைக்கும்," என்று சொல்லுங்கள். சொன்னது போல நடந்தால் தாமதிக்காமல் வாங்கிக் கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

சுவிச் துளையினுள் கையை போடுவான்,கிணறு உற்றுப் பார்த்து நிப்பான் இப்படி ஆபத்தான விளையாட்டுகளில் தான் ஈடுபடுகின்றான்

இமா அவர்கள் நீங்கள் பதில் அளித்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ... ரொம்ப நன்றி ... திருமதி Farwin shifa சொல்லவே வேண்டாம் அவர்கள் மகன் என்ன செய்வான் என்று ஏனெனில் அதே வயதில் குழந்தை வைத்திருக்கும் எல்லா பெண்களும் சந்திக்கும் பிரச்சினைதான் "குழந்தை துரு துரு வென்று இருப்பது...எப்படி சாமலிப்பது என்று தெரியமால் புலம்புவது ... " நான் அதனால் தான் என் குழந்தையும் அப்படி தான் என்று (அவர்கள் சொல்லாமலே என் குழந்தை போலும் அவர்கள் குழந்தையும் சேட்டை செய்கிறது என்று புரிந்து கொண்டேன் ) நான் கூறினேன் ... சொல்லியா தெரிய வேண்டும் இவர்கள் செய்யும் சேட்டையை ... என்னுடைதோழி ஒரு வயது குழந்தை வைத்துள்ளாள் அவளும் இதே மாதிரி சொல்லிகிறாள் ... அப்போது எல்லா குழந்தைகளும் அந்த அந்த வயதில் அதனுடைய வேலையை காட்ட ஆரம்பிக்கின்றன ... உங்கள் பதில் விவரமாக விளக்கமாக உள்ளது ...பயனுள்ள பதிவு ..

நன்றி இமா மற்றும் சாரா எல்லா குழந்தைகளும் அப்படித்தான்ன் என்று அவர்கள் வளரும் வரை பொறுமையாக இருப்போம் வளர்ந்து விட்டார்கள் என்றால் புத்தி தெரிந்து விடும்.நன்றி

//சுவிச் துளையினுள் கையை போடுவான்,கிணறு உற்றுப் பார்த்து நிப்பான் இப்படி ஆபத்தான விளையாட்டுகளில் தான் ஈடுபடுகின்றான்

// நேரமில்லை இருப்பினும் மனசு பதறுவதால் பதிலளிக்கிறேன். சுவிச் துளையை மூடி வைக்க வேணும் . எலக்ரோனிக் கடையில் கிடைக்கும் . கிணறு நெட் ஆல் கவர் பண்ன வேணும் . குழந்தைகள் உள்ள வீட்டில் பாதுகாப்பாக எல்லாத்தையும் மாற்றி அமைக்க வேணும் . குழந்தையோடு சேர்ந்து தினமும் விளையாடுறதையும் தினமும் 1 மணி நேரம் வெளியே கூட்டிப்போவதாலும் குழப்படியை குறைக்கலாம் .புலம்புவதாலும் குழந்தையை அடிப்பதாலும் குழந்தைக்கு மன அழுத்தம் உண்டாகும்.

நன்றி சுரேஜினி சிஸ்டர்,அப்படி செய்ய தான் இருக்கோம்.செலோடெப் சுவிச் ஒட்டி வைத்து இருக்கேன்.ஒரு மகன் தான் அவனோடே தான் டைம் போர.அவன தனிய விடுறதே இல்லை பயம் .என்ன செய்வான் என்று இல்ல,பின்னால் தான் திறியுத

மேலும் சில பதிவுகள்