தேதி: May 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வாழைக்காய் - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் பால் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி அரிசி களைந்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுக்கவும். (அரிசி கழுவிய நீரில் வேக வைத்து எடுப்பதால் வாழைக்காயின் வாய்வு தன்மை நீங்கிவிடும்.)

வேக வைத்த வாழைக்காயில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். (விருப்பப்பட்டால் சோள மாவும் சேர்க்கலாம்)

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான வாழைக்காய் ஃப்ரை தயார். இது சாப்பிடுவதற்கு மீன் வறுவலைப் போன்று சுவையாக இருக்கும்.

Comments
swa
நெத்திலி எண்ணெய் ல பொறித்த மாதிரியே இருக்கே. சூப்பரப்பு
Be simple be sample
நன்றி
எனது குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவ்ஸ்
ஆமா ரேவ்ஸ் அப்படித்தான் இருக்கும் நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாழைக்காய் வறுவல்
சுவா அக்கா, தேங்காய் பால் சேர்த்து புதிதாக இருக்கவும் செய்து பார்த்தோம்.. செம டேஸ்ட்.. போட்டோ எடுத்திருக்கேன்..இன்னும் போட்டோக்கள் சேரவும் அறுசுவை fb குரூப்பில் போடுகிறேன்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி