ஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)

தேதி: May 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சத்துமாவு - 2 தேக்கரண்டி
ஆப்பிள் - கால் பகுதி
பால் - கால் கப் (ஃபார்முலா பால்)


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆப்பிளை தோல் நீக்கி சிறிய கண்களுள்ள துருவியில் துருவிக் கொள்ளவும்.
சத்துமாவுடன் 4 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சத்துமாவு கரைசல் மற்றும் பால் சேர்க்கவும்.
மிதமான சூட்டில் கட்டியில்லாமல் கலக்கவும். கொதித்து கலவை கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சத்துமாவு பால் கலவையில் துருவிய ஆப்பிளை சேர்க்கவும்.
ஆரோக்கியமான சத்துமாவு போரிட்ஜ் தயார். காலை நேர சிற்றுண்டியாக ஆறு மாதம் முதலே குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

குழந்தைக்கு எவ்வித பாலை ஏற்கனவே பயன்படுத்துகிறோமோ அதே பால் மட்டுமே பயன்படுத்தவும்.

ஃபார்முலா பால் அல்லாது தாய் பால் மட்டுமே கொடுக்கும்பட்சத்தில், தாய் பால் பயன்படுத்தியும் போரிட்ஜ் தயாரிக்கலாம்.

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவை சேர்ப்பதை தவிர்க்கவும். அவற்றில் உள்ள இனிப்பு குழந்தைகளின் ஈறுகளை பாதித்து ஆரோக்கியமற்ற பற்களை வளரச் செய்யும்.

திட உணவு தொடங்கும் போதே இப்படி பழங்களை கொடுத்துப் பழகிவிட்டால், பின்னாளில் குழந்தைகள் பழங்கள் உண்ண மறுப்பதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு.என் குட்டி தேவதைக்கு 6 மாதம் முடியப்போகுது.இதுவரை தாய்ப்பால் மட்டும்தான்.நீங்க சொன்ன மாதிரி தாய்ப்பால் சேர்த்து தயாரிக்கும்போது சத்துமாவுக் கரைசலை மட்டும்கொதிக்க வைத்து இறக்கி தாய்ப்பால் சேர்க்கலாமா?அல்லது தாய்ப்பாலையும் சேர்த்து கொதிக்க வைக்கணுமா?

எல்லா புகழும் இறைவனுக்கே

நன்றி ரேமு. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

தாய்ப் பால் நீர்க்கத்தான் இருக்கும். அதனால் தாய்ப் பாலிலே கூட சத்துமாவை கரைத்து கொதிக்க வைக்கலாம்.

சத்து மாவு தயாரிப்பது எப்படி

மேலே வலது பக்கம் கூகுள் சர்ச் பாக்ஸ் இருக்கிறது பகவதி. 'சத்துமாவு' என்று தட்டினீர்களானால் அறுசுவையில் உள்ள இது தொடர்பாகப் பேசிய இழைகளைக் காட்டும். விரும்பியதைத் தெரிந்து எடுங்கள்.

ஒவ்வொன்றாகத் தேடிக் கொடுக்க இன்று எனக்கு நேரம் போதவில்லை.

‍- இமா க்றிஸ்