பாகற்காய் பொரியல்

தேதி: February 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாகற்காய் - 100 கிராம்
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - 2 சிட்டிகை


 

பாகற்காயை கழுவிய பிறகு மெல்லிய வட்டங்களாக நறுக்கிகொள்ளவும்.
அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு குறைந்த தீயில் வைத்து ஊறிய பாகற்காயை போட்டு பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அஸ்மா! இன்று உங்கள் பாவற்காய் பொரியல் செய்து சுவைத்தேன்
மிகவும் நன்றாக இருந்தது. செய்வதும் மிகவும் சுலபம். சாதத்துடன் சாப்பிட நன்றாக
இருந்தது.நன்றி இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.