தேதி: May 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
(புளிப்பு) ஒட்டு மாங்காய் (கிளி மூக்கு) - ஒன்று
(இனிப்பு) வெல்லம் - 50 கிராம்
(காரம்) பச்சை மிளகாய் - ஒன்று
(கசப்பு) வேப்பம்பூ (அ) வெந்தய பொடி - சிறிது
(உவர்ப்பு) உப்பு - கால் தேக்கரண்டி
(துவர்ப்பு) வெற்றிலை காம்பு - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் மூடி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
ஒட்டு (கிளி மூக்கு) மாங்காயாக இருந்தால் நன்றாக இருக்கும். அது கிடைக்கவில்லையெனில் எந்த மாங்காயிலும் செய்யலாம். மாங்காயை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

துருவிய மாங்காயுடன் (புளிப்பு) மஞ்சள் தூள், உப்பு (உவர்ப்பு), பச்சை மிளகாய் (காரம்) மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். துருவி வேக வைப்பதால் சீக்கிரம் வெந்து விடும்

பின்னர் வெல்லம் (இனிப்பு) சேர்க்கவும். (நான் பனை வெல்லம் சேர்த்துள்ளேன். சாதாரண வெல்லமாக இருந்தால் பாகு காய்ச்சி வெல்ல பாகாக சேர்க்கலாம்.)

அதன் பிறகு வேப்பம்பூ (அ) வெந்தய பவுடர் (கசப்பு) (எனக்கு வேப்பம்பூ கிடைக்காததால் வெந்தய பொடி சேர்த்துள்ளேன்) மற்றும் வெற்றிலை காம்பை (துவர்ப்பு) நசுக்கி சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு சுவைக்காக தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றை பச்சடியில் சேர்க்கவும். பச்சடியை நன்கு கிளறி விடவும்.

சுவையான அறுசுவை பச்சடி தயார். இது இட்லி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். பாயாசம் போல அப்படியேவும் சாப்பிடலாம்.

இது தமிழ் வருட பிறப்பிற்கு கடவுளுக்கு படைக்க செய்வது. ஆறு சுவை போல வருடம் முழுவதும் வாழ்விலும் எல்லா சுக துக்கங்களும் சமமாக கலந்து இருக்க இதை கடவுளுக்கு படைக்கிறோம்.
Comments
பாலா
அறுசுவை பச்சடி அருமை.கேள்விபட்டதே இல்லை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அறுசுவை டீமுக்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
முசி
நன்றி முசி. சுவையும் அருமையாக இருக்கும். சத்தானதும் கூட. ட்ரை பண்ணி பாருங்க.
எல்லாம் சில காலம்.....
பச்சடி
புதுசா இருக்கே. கேள்விப் பட்டதே இல்லை. கலக்குறீங்க பாலா :))
வாணி
நன்றி வாணி. உங்கள விட கலக்கல. உங்க முன்னாடி இதுலாம் ஜுஜுபி.
எல்லாம் சில காலம்.....