முருங்கைக்கீரை தண்ணிச்சாறு

தேதி: May 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முருங்கைக்கீரை - 2 கப்
பாசிபருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் - கால் மூடி


 

பாசிபருப்பை கழுவி 10 நிமிடம் ஊற‌ வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற‌ வைத்த‌ பாசிபருப்பை சேர்த்து வதக்கவும்.
பருப்பு கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். (தண்ணீருக்கு பதில் அரிசி களைந்த தண்ணீரும் உபயோசிக்கலாம். சுவை நன்றாக‌ இருக்கும்)
பருப்பு நன்கு வெந்த‌ பின்னர் ஆய்ந்த‌ முருங்கைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வேக‌ விடவும்.
இதனுடன் அரைத்த‌ தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். (தேங்காய் பச்சையாக‌ சாப்பிடுவது நல்லது. அதிகமாக‌ கொதிக்க‌ வைத்தால் கொழுப்பாக‌ மாறும்)
வெயிலுக்கு ஏற்ற‌ குளிர்ச்சியான‌ தண்ணிச்சாறு தயார்.

இந்த‌ தண்ணிச்சாறை மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி போன்ற‌ கீரையிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லாருக்கே.என் பக்கத்து வீட்டுல கடுகுச்சாறு ந்னு பெயர் இதுக்கு.

Be simple be sample

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

கடுகு சாறா? இதுல‌ கடுகே யூஸ் பண்ணலயே? இது முருங்கையின் சாறு முழுதும் சேர்ந்து பருப்புடன் கலந்து ரொம்ப‌ நல்லா இருக்கும். ஈஸி தான் நீங்களும் ட்ரை பண்ணுங்க‌. சத்தானதும் கூட‌. எத்தன‌ நாள் தான் பக்கத்து வீட்லயே பாத்துட்டு இருப்பீங்க‌?

எல்லாம் சில‌ காலம்.....