நியூட்ரிஷன் உருண்டை

தேதி: May 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பேரீச்சம்பழம் - 50 கிராம்
பாதாம் - 10
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
எள் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
நெய் - சிறிது


 

பேரீச்சையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெறும் வாணலியில் பாதாம் மற்றும் வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.
மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் பருப்பு வகைகளை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடித்த சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை, எள்ளு மற்றும் நெய் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்ததும் நன்றாக ஒன்றுடன் ஒன்று சேரும்படி கலந்துக் கொள்ளவும்.
பருப்பு, பேரீச்சை கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான நியூட்ரிஷன் உருண்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான‌ சூப்பர் உருண்டை. கலக்கல்.

எல்லாம் சில‌ காலம்.....

எளிமயான‌,ஹெல்தி குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &அறுசுவை டீம் மிக்க நன்றி

Be simple be sample

பாலா தான்க்யூ ..

முசி தான்க்யூ. உங்க குறிப்பு வந்து கொஞ்ச நாள் ஆகிடுச்சே முசி.

Be simple be sample

//குழந்தைகளுக்கு பிடித்தமான// இமாவுக்கும் பிடிச்சிருக்கே! அப்போ இமா பேபியா! :-) ட்ரை பண்ணுறேன் என்று சொல்லப் பயமா இருக்கு. :-) நீங்களே இரண்டு (மட்டும்) அனுப்பி வைங்க ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

குழந்தைகளுக்கு பிடித்தமான// இமாவுக்கும் பிடிச்சிருக்கே! அப்போ இமா பேபியா! :-)// பார்த்தால் அப்படித்தான் இருக்கிங்க.;).

இரண்டு மட்டும் போதுமா.கண்டிப்பா அனுப்பிடுவோம். தான்க்யூ இமாம்மா

Be simple be sample

நியூட்ரிஷியஷ் உருண்டை மிகவும் நன்றாக இருந்தது. நல்ல சத்தான மாலை நேர உணவு. மிக நன்றி.

Try and try again until you reach the target.

Anitha

Thanku pa. Seithu parthutu sonnathuku

Be simple be sample