அறிமுகம்

ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னை போன்றோருக்கும் பாலாவின் முதற்கண் வணக்கம். உங்கள் பாசத்திற்குரிய‌ பாலநாயகி (அப்டிலாம் இல்லையேனு நீங்க‌ சொல்றது கேக்குது) சரி பாசம் இல்லாட்டியும் உங்களில் ஒருத்தி பாலநாயகி எழுதுகிறேன். என்னனுலாம் கேக்கபடாது. நானே ஒரு ஃப்லோல‌ போயிட்டு இருக்கேன். அப்டியே படிங்க‌. பாசத்திற்குரிய‌ பாரதிராஜா மாரி ட்ரை பண்ணேன். வரல‌. பாதிலயே கட் ஆகிடுச்சி. சரி என் ஸ்டைல்லயே ட்ரை பண்றேன். போதும் மேட்டர்க்கு வானு சொல்றீங்களா. சரி ஸ்ட்ரெய்டா மேட்டர் போயிடலாம். நான் காலேஜ் படிச்ச‌ காலத்துல‌ (என்ன‌? என்ன‌ சொல்றீங்க‌? நான் காலேஜ்லாம் போனனானு கேக்கறீங்களா? அப்டி ஒரு சம்பவம் எனக்கும் நடந்துச்சி) யாருக்காவது இன்ட்ரொடக்ஷன் குடுக்கனும்னா சிம்பிளா கலாய்போம். இப்போ இது என்னோட‌ இன்ட்ரொடக்ஷன் வலைபதிவு இல்ல‌. எப்டி இன்ட்ரோ குடுக்கலாம்னு யோசிச்சேன். என்னை மட்டும் எப்டி இன்ட்ரோ பண்றது? நான் கொஞ்சம் கூச்ச‌ சுபாவம் வேற‌. (நடிக்காதனு சொல்லாதீங்க‌. உண்மையாவே. நம்புங்க‌. நம்பி தான் ஆகனும்) நடிகர்களாவே இன்ட்ரோ குடுக்கலாம்னு ஒரு ஐடியா. நம்ம‌ அறுசுவைல‌ எல்லாருக்கும் தெரிந்த‌ பல‌ முக்கிய‌ புள்ளிகள் இருக்காங்களே அவங்களோட‌ நாமும் சேந்துக்கலாம்னு ஒரு இன்ட்ரோ குடுக்க‌ வந்து இருக்கேன். என்னை மட்டும் தனியா சொன்னா கொஞ்சம் ஓவரா இருக்கும் இல்ல‌.

சரி இன்ட்ரோ குடுக்க‌ ரெடி ஆயாச்சி. எப்டி குடுக்கறது? சரி பாரதிராஜா ஸ்டைல்ல ஒரு படம் பண்ணலாம்னு யோசிக்கறேன். என்னனு கேக்கறீங்களா? இது ஒரு கிராமத்து கதை இல்லீங்க‌ அறுசுவை கதை. கதைலாம் அப்றம் பாக்கலாம். இப்போ நடிகர் நடிகைலாம் பாக்கலாம். அறுசுவைனா எப்பவும் ஹீரோ நம்ம‌ பாபு அண்ணன் தா. ஆனா இது லேடீஸ் சப்ஜெக்ட். சோ ஹீரோயின் மட்டும் தான். அது யாருனு கேக்கறீங்களா? ஏங்க 742 குறிப்பு குடுத்து முதலிடத்தில் இருந்து அறுசுவைல‌ ஒரு கலக்கு கலக்கற‌ வனிதா தான் நம்ம‌ படத்தோட‌ ஹீரோஇன். பல‌ கிட்சன் குயின்களை உருவாக்கின‌ அவங்களை படத்தோட‌ குயின் ஆக்காட்டி எப்டி? நம்ம‌ அறுசுவை குயின் வனி தான் நம்ம‌ ஹீரோஇன். ம்ம். எல்லாம் ஒத்துகிட்டீங்க‌ தான?

அடுத்து வில்லி கேரக்டர். அப்டி யாருமே இங்க‌ இல்ல‌. எல்லோருமே ஒரு விதத்துல‌ அருமையா கலக்கற‌ (நடிப்புல‌ இல்லங்க‌ கிட்சன்ல‌ கரண்டியால‌ கலக்கற‌) சூப்பரான‌ ஆளுங்க‌ தான். அப்டி இருக்கப்போ வில்லினு யாரையும் சொல்ல‌ முடியாது. இத‌ பத்தி ரொம்ப‌ நேரம் பேச‌ வேணாம்.

சரி அடுத்து காமெடியன். யோசிங்க‌ பார்ப்போம். ம்ம். கரெக்ட் அவங்களே தான். ரேவதி.எஸ். இவங்கள‌ விட்டா வெற‌ யாரு நமக்கு நல்ல‌ காமெடியன் கிடைப்பாங்க‌? பூரி சுட்ட‌ கதை, அல்வா கிண்டன‌ கதைனு, வேற‌ யாரால‌ இவ்ளோ காமெடியா பேச‌ முடியும். சரி காமெடியன் முடிவாகிடுச்சி.

அடுத்து அம்மா. இமா அம்மா, சீதா அம்மானு நிறைய‌ கேரக்டர் இருக்காங்க‌. அதுலயும் நல்ல விஷயம்னா அழகா பாராட்டி, தப்புனா தட்டி கேட்டு அழகா எடுத்து சொல்லி அழகான‌ அம்மாவா இருக்கறது நம்ம‌ இமா அம்மா. அனுபவம் சொல்லி குடுத்து புரியற‌ மாறி அன்பா சொல்றது நம்ம‌ சீதா அம்மா. அம்மா உங்கள் சாய்ஸ். இன்னும் நிறைய‌ இருக்காங்க‌. நீங்க‌ செலக்ட் பண்ணுங்க‌. அம்மா உங்கள் சாய்ஸ்.

அப்றம் பாடலாசிரியர் மற்றும் கதையாசிரியர் யாருனு பாப்போம். வேற‌ யாரு ரஜினி பாய் தான். கவிதை எழுதறதுலயும் கதை எழுதறதுலயும் இவங்க‌ சூப்பர். பாடகர் பாடகிக்கு எப்டி செலக்ட் பண்றது? இதுலாம் ஒலி அமைப்பாச்சே. சரி அத‌ விட்ருவோம்.

மியூசிக் டைரக்டர் நாம‌ எல்லாமே மியூசிக் டைரக்டர் தான். சமைக்கும் போது கரண்டியால‌ கிண்டி விடற‌ அப்போ சத்தம் வருமே அது எல்லாமே புது இசை தாங்க‌. நம்மல‌ மிஞ்ச‌ யாரால‌ முடியும்?

அப்றம் இங்க‌ சைடு ஆக்ட்ரஸ், சின்ன‌ சின்ன‌ கெஸ்ட் ரோல்ல‌ நிறைய‌ பேர் இருக்காங்க‌. எல்லாரையும் சொன்னா லிஸ்ட் பெருசா போகும் இடம் பத்தாது. அவங்கலாம் சித்தி, அத்தை, அண்ணி, அக்கா, தங்கைகள். அப்றம் நடுல‌ கொஞ்சம் பக்கத்த‌ காணோம் மாறி நடுல‌ கொஞ்சம் பேரை காணோம். அதுக்காக‌ அவங்கள விட்ற‌ முடியாது. அவங்க‌ எல்லாமே சரோஜா தேவி, ஜோதிகா மாறி திடீர்னு சூப்பரா ரீ‍என்ட்ரி குடுப்பாங்க‌.

சரி டைரக்டர், ப்ரொடியூசர் யாரு? அது நம்ம‌ அறுசுவை ஹீரோ பாபு அண்ணா தான். லைட்ஸ்மேன் கேமரா மேன்லாம் நம்ம‌ அட்மின் தாங்க‌ வேற‌ யாரு? சரி எல்லாருக்கும் சொல்லிட்ட‌. ( நான் யாரையும் விட்டு இருந்தா மன்னிக்கவும்.) நான் யாருனு நீங்க‌ கேக்கறது எனக்கு கேக்குது. நான் புதுமுகம் அறிமுகம். ஹீரோயின் காமெடியன் கெஸ்ட் ரோல்லாம் இல்ல‌. ஹீரோயின் காமெடியன்னு யாரா இருந்தாலும் ஒரு எடுபுடி (சப்ஸ்டிடியூட்) கூடவே இருப்பாங்க‌ இல்ல‌. அதுமாறி. இந்த‌ அறிமுகம் எப்டினு நீங்க‌ தான் சொல்லணும். என்னோட‌ அறிமுகம் பத்தி கேக்கலங்க‌. என்னோட‌ அறிமுக‌ வலைபதிவு பத்தி கேக்கறேன். நீங்க‌ எது பத்தி சொன்னாலும் சரி தான். மொக்கனு மட்டும் சொல்லாதீங்க‌. இந்த‌ இளம் நெஞ்சு தாங்காது. இதுக்கு யாரும் கிண்டலடிக்கபடாது. அப்பாடியோ தாங்கலடா சாமி.

Average: 5 (1 vote)

Comments

வெல்கம் ...பாலா....
அறிமுகம் நல்லா தான் இருக்கு.
சீக்கிரம் கதையை எடுத்து விடுங்க‌ டைரக்டரே.
நாங்கள்ளாம் ஆடியன்ஸ்சா மாறி ஆர்வமா காத்திட்டிருக்கோம்.
ம் புதுக்கதை
புது டைரக்டர்
புது சீன்
கலக்குங்க‌.........:))))

ஹாய்,
கமான் யா. அறிமுகத்திலேயே அசத்திபுட்டீங்க‌. அருசுவை தோழியரின் அன்பான‌ வரவேற்புபா. வாங்க‌ வந்து கலக்குங்க‌. கிளாப் பண்ணி வரவேற்கிறோம் வாங்க‌. வாழ்த்துக்கள் பால‌ நாயகி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நன்றி நிகி. பாசத்திற்குரிய‌ பாலானு சொன்னதுல‌ உச்சி குலுந்துடுச்சி. இந்த‌ மே மாசம்ல‌ கூட‌ சிம்லா ல‌ இருக்க‌ மாறி இருக்கு.
//சீக்கிரம் கதையை எடுத்து விடுங்க‌ டைரக்டரே.// இத‌ ரஜினி பாய் கிட்ட‌ தான் கேக்கணும். அவங்க‌ கதை ரெடி பண்ணிட்டா பாபு அண்ணன் கிட்ட‌ சொல்லி துவங்கிடலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரஜினி. உங்கள ரஜினினே சொல்லலாம் இல்ல‌ கவிஞரே?

எல்லாம் சில‌ காலம்.....

பாசத்துக்குரிய பாலா அவர்களே. புத்தம் புதிதாய் அறிமுகம் தொடக்கம் கலக்கல். நம்மள. ஒரு ரோல் சேர்த்துட்டிங்க;). தாங்க்ஸ்ங்கோ. உங்கள் படைப்புகள் காண காத்திருக்கிறோம்.

Be simple be sample

பாசத்துக்குரிய பாலா அவர்களே. புத்தம் புதிதாய் அறிமுகம் தொடக்கம் கலக்கல். நம்மள. ஒரு ரோல் சேர்த்துட்டிங்க;). தாங்க்ஸ்ங்கோ. உங்கள் படைப்புகள் காண காத்திருக்கிறோம்.

Be simple be sample

பால நாயகி எப்போ சினிமா நாயகி ஆனாங்க?? ;) ஹீரோயின்னு என்னை சொன்னா உங்க கதை ரொம்ப ஓல்டு ஸ்டோரி போலிருக்கே... வயசான ஹீரோயின் :P புது புது அறிமுகங்கள் எத்தனை இருக்காங்க... க்றிஸ், டெடி... பிடிங்க நல்ல புது முக ஹீரோயினை ;)

எது எப்படி இருந்தாலும் அறிமுகம் என்ற தலைப்பை கண்டதும் அதுவும் அந்த படத்தோடு கண்டதும் அட்மின் அண்ணே தான் புதுசா அறுசுவையில் எதையோ அறிமுகப்படுத்துறது பற்றி போஸ்ட் போட்டிருக்கார்னு நினைச்சேன் :) பார்த்தா நாயகி... பால நாயகி ;) வாழ்த்துக்கள் பாலா. வாழ்க வளர்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை வலைப்பதிவுப் பக்கத்தில் இணைந்தமைக்கு என் வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு இடம் கொடுக்கலனா அறுசுவை நேயர்கள் எனக்கு இடம் குடுக்க‌ மாட்டங்கோ.

எல்லாம் சில‌ காலம்.....

அக்கா நீங்க‌ சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களை விட‌ வேற‌ நல்ல நாயகி நம்ம‌ கதைக்கு கிடைக்க‌ மாட்டாங்க‌. ரஜினிபாய் தான‌ கதை எழுத‌ போறாங்க‌. உங்களுக்கு ஏத்த மாறி எழுதுவாங்க‌ (ஜோதிகாக்கு 36 வயதினிலே மாறி). இது சினிமா இல்ல‌ அக்கா. இது ஒரு அறுசுவை கதை. கதையின் நாயகி நீங்க‌ அவ்ளோ தான்.

//வயசான ஹீரோயின்// உங்களுக்கு வயசானாலும் உங்க‌ ரசனையும், எழுத்தும், திறமையும் குறையல‌.

//வாழ்த்துக்கள் பாலா. வாழ்க வளர்க.// நன்றி அக்கா. நீங்க‌ வாழ்த்தினாலே மனசுக்கு அம்புட்டு மன‌ நிறைவா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றிகள் அம்மா. இமா அம்மா வாழ்த்து சொன்னா இறைவனே சொன்ன‌ மாறி.

எல்லாம் சில‌ காலம்.....

அறிமுகம் அறிமுகமாகவே அழகாக இருக்கு.
வரிகள் எல்லாம் நல்லாயிருக்கு.

சீக்கிரம் உங்கள் வலைப்பதிவு காண ஆவல்....
தேர்ந்தெடுத்த ஆக்டர்ஸ் சூப்பர்....
வாழ்த்துக்கள் பல....

அன்பு தோழி. தேவி

அன்புள்ள‌ பாலா,
ஒரு சின்ன‌ கருத்து. "பாலாவின் முதற்கண் வணக்கம்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍>>>> முதற்கண் பாலாவின் வணக்கம் என்று இருக்க‌ வேண்டும்.
எந்த‌ இடத்திலும் முதல் முறை மட்டுமே நாம் (சபையிலோ, நேரில்
யாரிடத்திலுமோ அல்லது கட்டுரையானாலும் ) வணக்கம் கூறுவோம்.
முதற்கண் வணக்கம் என்பது முதல்முறை வணக்கம் இரண்டாம் முறை வணக்கம் என்று அடுத்து அடுத்து பலமுறை வணக்கம் கூறுவது போல் ஆகும்.
நன்கு தெளிவு வேண்டுமானால் பக்கத்தில் உள்ள‌ தமிழாசிரியரைக் கேட்கலாம்.
நல்ல‌ எழுத்து வளம் பிழையின்றி அமைந்தால் கீரீடம் சூட்டிக் கொண்டது போல‌, சொற்கள் இடம் மாறுவதால் எந்த‌ அளவிற்கு பொருள் மாறுபடும்
என்பதை அறிந்து கொண்டால் நம் எழுத்துக்கு நாமே தான் ராஜா.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி பூங்கோதை. அருமையான‌ கருத்து. அழகாக‌ தெளிவாக‌ கூறியுள்ளீர்கள். நீங்கள் தமிழாசிரியரா?

எல்லாம் சில‌ காலம்.....

பாலா டைரக்டர் மேடம் உங்க படத்துல எங்களுக்கும் ஏதாவது ரோல் கொடுங்க.. அதும் இந்த ரேவா பெண்ணை உதைக்குற ரோல்..

நல்ல என்டரி கலக்குங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அறிமுகம் சூப்பர். சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்க பாலா. நாங்க எல்லோரும் ஆவலா உங்க எழுத்தை படிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

உதைக்கிற ரோல் நா உங்களுக்கு கழுதை ரொல்தான் இருக்காம். அதான் நல்லா உதைக்கும்.;)

Be simple be sample

உதைக்கற‌ ரோல்னா என்ன‌ பண்ணலாம்? ரேவ்'ஸ் வேற‌ உங்களுக்கு கழுதை ரோல் குடுக்க‌ சொல்லி இருக்காங்க‌. இது மிருக‌ வதை சட்டம் கீழ‌ வரும். அதனால‌ அது பக்கம் போக‌ வேண்டாம். ரேவ்'ஸ் க்கு ஏற்கனவே காமெடியன் ரோல் குடுத்தோம் இல்ல‌. அத‌ செந்தில் ரோல் மாறி மாத்திட்டு உங்களுக்கு கவுண்டர்மணி மாறி ரோல் குடுக்கலாம். எப்டி நம்ம‌ ஐடியா? என்ன‌ ரேவ்'ஸ் உதை வாங்க‌ தயாரா? ரேவா எனக்கு ஒரு சின்ன‌ ஹெல்ப். அப்டி உதைச்சீங்கனா அவங்க‌ வாய்ல‌ ஒன்னு குடுக்கறீங்களா? என்னமா ஆடுது அது? (ரேவ்'ஸ் வாய‌ சொன்ன)

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி வாணி. ஆனா டைரக்டர் பாபு அண்ணன் தான். அவர‌ தான் கேக்கணும்.

எல்லாம் சில‌ காலம்.....

உங்களுக்கு செந்தில் மாறி ரோலும் ரேவாக்கு கவுண்டமணி மாறி ரோலும் கொடுக்கலாம்னு யோசிக்கறோம். நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌? நீங்க‌ சொல்ற‌ மாறி கழுதைலாம் போட்டா நம்மல‌ புடிச்சி ஜெயில்ல‌ போட்ருவாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

அன்பு பாலநாயகி,

வலைப்பதிவுலகில் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் உங்களை வரவேற்கிறோம்.

அம்மா வேஷம் கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்!

சீக்கிரமே 100வது பதிவு வர வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

எப்டி இருக்கீங்க‌? உங்க‌ பதிவு பார்த்து மிக்க‌ மகிழ்ச்சி அம்மா. உங்க‌ பதிவு பாத்த‌ சந்தோஷத்துல‌ எதுமே புரியல. நன்றி அம்மா.

எல்லாம் சில‌ காலம்.....

பூங்கோதை சொன்ன இந்த விடயம்... என்னையும் கடுப்பிலாழ்த்துவது உண்டு. :-) யாராவது அந்த வார்த்தையைத் தவறான இடத்தில் பயன்படுத்திப் பேச்சை ஆரம்பித்தால், மீதிப் பேச்சிலிருந்து என் கவனம் வேறு புறம் திருப்பிவிடுவதும் உண்டு. இப்போதெல்லாம் கற்றறிந்தவர்கள் கூட இப்படிப் பேசுவதைக் கேட்க முடிவது வருத்தமான விடயம். ;( நாம் சொன்னால், நாம் சொன்னதுதான் தவறு என்று ஆதாரம் காட்டப் பிரபலங்களின் பேச்சுக்கள் பல, இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன பூங்கோதை. நீங்கள் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.

அப்படியே... பாலநாயகிக்கு மாதிரி, மாறி, மாரி என்கிற சொற்களின் பயன்பாட்டையும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

மாதிரி __ யாரைப்போல‌ / like whom
மாறி‍‍‍ ___ ஒன்று வேறு ஒன்றாக‌ ./ changed fully
மரி __ மரணம் / மறி ‍‍‍‍____ தடுப்பது / மலி ___ அளவுக்கு அதிகமாக‌
மாரி ___ யார்( மழையாய்க்) கொட்டுவது /(rain)ing heavy
விடு__ விடுதல் leaving
வீடு மோட்சம் heavenly house
வீழ் விழுதல் falling from a place
வீளை/ whistle
முலை breast
மூலை corner
மூளை brain
வலை net
வளை bending a thing, bangles, house of the grab
வாழை banana fruit, tree,
வாளை a kind of fish, sword. the saw (cutting tree
கருப்பு __நிறம் / கறுப்பு ___ வஞ்சகம்
கூந்தல் கிழவன் ‍‍___ கணவன்
உணங்கல் ____ உருண்டை / உணக்கு ____ காயவைத்தல்
கலை.___ ஓவியம் போன்றவை, கலைத்துப்போடுதல்
களை _‍‍‍___ பயிரில் உள்ள‌ வேண்டாத‌ செடி கொடி போன்றவை
அரிசி போன்ற‌ தானியங்களை நீரில் இட்டுக் கழுவுதல்
வேண்டாதவற்றை பொறுக்கி எடுத்து ஒதுக்குதல்
கழை ___ மூங்கில் ( அதன் கொம்பு. தடித்த‌ மூங்கில் )
குழை____ தளிர் இலையோடு உள்ள‌ கொத்து, பொருள்களைக் குழைத்தல்
தேன், நெய், எண்ணை போன்றவற்றோடு,/ சோற்றைக் குழைய‌
வேகவைத்தல்,/ காதில் பெண்கள் அணியும் ஒருவகைக்காதணி
நாய் வாலை ஆட்டுதல்
குலை‍‍___‍ ஒரே காம்பில் காய்த்து இருக்கும் காய்கள், வாழை,(மாங்கொத்து)
குரை___ நாய் குரைத்தல்
குறை____ இருக்கிற‌ அளவில் இருந்து வெட்டியோ, ஒடித்தோ எடுத்தோ சிறியதாக்குதல்
குழம்பு ___ சாம்பார், குருமா, தக்காளிக்குழம்பு போல‌,/ எண்ணம், செயல்
இவற்றில் ஒரு முடிவு எடுக்கமுடியாமல் திண்டாடுதல்.
குளம்பு___ ஆடு, மாடு, குதிரை, கழுதை போன்ற‌ பிராணிகளின் நகப்பகுதி
வரி ____ நீண்ட‌ படுக்கைக் கோடு/ வீட்டுக்குக் வரி.கட்டுவது/
நிரை__‍‍‍ ஆனிரை__ பசுக்கூட்டம்,
நிறை ____ பானை, சட்டி, குடம், அண்டா போன்றவற்றில் தானியம்,தண்ணீர்
போன்றவற்றை இட்டு, ஊற்றி நிரப்புதல்
உரி___ தேங்காய் போன்றவற்றை நார் உரித்தல்/
உறி ____ வெண்ணை,பால், தயிர் போன்றவற்றை எறும்பு, எலி இவற்றிடம்
இருந்து பாதுகாக்க‌ வளையத்தில் தொங்க‌ விட்டிருக்கும் மூன்று
கயிறுகள் அல்லது சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட‌ வளையம்
மேலும் தொடரலாமா?
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//மேலும் தொடரலாமா?// :-))) வேண்டாம், வேண்டாம்... :-) இதுவே அதிகம். :-)

முதலில்... 'மாதிரிக்கு' சில வரிகள் - பாலநாயகி எழுதியதை //அப்டியே படிங்க‌.
பாசத்திற்குரிய‌ பாரதிராஜா மாரி ட்ரை பண்ணேன்.//
//அனுபவம் சொல்லி குடுத்து புரியற‌ மாறி அன்பா சொல்றது...//
//அவங்க‌ எல்லாமே சரோஜா தேவி, ஜோதிகா மாறி திடீர்னு சூப்பரா ரீ‍என்ட்ரி குடுப்பாங்க‌.//
//சிப்ஸ் எல்லார்க்கும் பிடிக்கும். அதே மாறி இந்த‌ முறுக்கும் பிடிக்கும்.//

வழக்கமாக, எங்கெல்லாம் 'மாதிரி' என்னும் சொல் வர வேண்டுமோ அங்கெல்லாம் 'மாறி மாறித்' தட்டி வைப்பார்கள். பாரதிராஜாவைப் பற்றி வரும் வரியில் மட்டும் 'மாரி' எழுதியிருந்தார்.

//ஒண்ணுமே புரியலியே// :-) இங்கு எப்போதும் இமாதான், 'அது பிழை, இது பிழை,' என்று மற்றவர்கள் காலை வாருவேன். இப்போது ஒரு துணை கிடைத்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அந்த மகிழ்ச்சியில்... உங்களையும் இழுத்து விட்டிருக்கிறேன். ;-))))

‍- இமா க்றிஸ்

நானும் தமிங்கிலத்தில் பயின்றதால் இந்த‌ ப்ரச்சனை வருகிறது. இதன் பின் கற்றுக்கொள்கிறேன்.

//பாரதிராஜா மாதிரி//னு போட‌ எண்ணி எழுத்துப்பிழையில் நடுவில் "தி" விட்டு விட்டேன். அதற்கு இவ்ளோ பெரிய‌ பதிவா? பரவாயில்லை. எனக்கு விளக்க‌ இவ்ளோ பெரிய‌ ஆளே வந்தாங்களா? நம்ப‌ முடியவில்லை...

பேச்சு வழக்குல‌ சரோஜா தேவி ஜோதிகா மாறினு சொன்னது ஒரு குத்தமாயா? அத‌ கூட‌ இப்டி வாரி விடறீங்களே... கண்ணீருடன் :.(

எல்லாம் சில‌ காலம்.....

இமா அம்மா //மாதிரி, மாறி, மாரி// இதுக்கு மட்டும் தான் அர்த்தம் சொல்லி தர‌ சொன்னாங்க‌. இமா அம்மாவே போதும் போதும் இருக்கு மேல‌ வேண்டாம்னு சொல்லிடாங்க‌. பரவாயில்லை இவ்ளோத்துக்கும் அர்த்தம் உங்களால‌ கத்துக்கிட்டேன். நன்றி பூங்கோதை. இதை பதிவிடும் நேரத்தில் ஒரு வலைபதிவே பதிவிடலாம் போல‌. எனக்காக‌ இவ்ளோ நேரம் செலவிட்டதற்கு மிக்க‌ நன்றி பூங்கோதை.

ஆனால் ஒரு சிலவற்றில் தமிழுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லி இருப்பது அருமை. தமிழை கூட‌ ஆங்கிலம் கொண்டு விளக்க‌ வேண்டிய‌ காலத்தில் நாம் இருக்கிறோம். இது தான் கலிகாலமோ

எல்லாம் சில‌ காலம்.....

ஒன்னுமே புரியலியேனு தலைப்பு சொல்லி பதிவு போட்டு இருக்கீங்க‌. புரியாததுக்கே இவ்ளோனா புரிந்தால் இன்னும் நிறைய‌ போட்டு இருப்பீங்களோ? எதுவாக‌ இருந்தாலும் இவ்ளோ வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொண்டதில் மிக்க‌ மகிழ்ச்சி. நன்றி பூங்கோதை...;)

எல்லாம் சில‌ காலம்.....

அன்புள்ள‌ பாலனாயகி அம்மையே
காலை வணக்கம். வணக்கம். வணக்கம்.
ஒரு நீண்ட‌ பதிவு தருவதற்கு நீங்கள் மட்டுமே காரணம் அல்ல‌. அறுசுவையில்
பதிவுகள் இட்ட‌ பலரின் பதிவுகளும் காரணம். சரியான‌ நேரத்தில் இமாவின்
பதிவு எனக்கு ஒரு தூண்டுகோலாக‌ பக்கபலமாக‌ அமைந்ததற்கு நான் இமாவிற்கு
நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் பலரின் பதிவுகளில் வரும்தாங்கமுடியாத‌
பிழைகளை எப்படித் திருத்துவது என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.
தமிழில் எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் வேறு வேறு. பொருளில் மிகப் பெறும் வேறுபாடு ஏற்படும் என்பதைத் தெரிவிக்கவே எழுதினேன். தான் எழுதுவதில் தவறு இருக்கிறது என்று தெரிந்தாலும் அதைத் திருத்திக்கொள்ள‌
இயலாமை காரணமாக‌ ( வயது, வாழும் சூழ்னிலை, நாடு, வெளியே சொல்ல‌
முடியாத‌ பல்வேறு காரணங்கள் இப்படிப் பல‌ காரணங்கள் இருக்கலாம்)
என்பதால் தான் இதனை எழுதினேன்)இதில் முதற்கண் நன்றி உனக்கேஉனக்கு.
வசமாக‌ பாண்டிச்சேரி பாலா மாட்டிக் கொண்டாய்.( என் தந்தையின் தாயார்
தனபாக்கியம் பிறந்த‌ ஊர் பாண்டிச்சேரி). "என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே " என்று வடிவேலு பாணியில் கேட்காமல் (உண்மையிலேயே மனதில் உனக்கு வருத்தம் இல்லையென்றால்) தற்காலத்தில் தமிழ் படுகின்ற‌
பாட்டை சிறிது குறைக்கலாம் (அட்மினின் உதவியோடு) என்று விரும்புகிறேன்.
தமிழாசிரியரின் மகளாகப் பிறந்து தமிழாசிரியராகவும் தலைமைஆசிரியராகவும்
30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கு இதையாவது செய்யலாமே என்று
ஓர் ஆசை. இதை உனது பதில் பதிவிற்குப் பிறகே தொடரலாம் என்று நினைக்கிறேன்.விரைவில் உனது பதிலினை எதிர்பார்க்கும் பூங்கோதை.
அன்புடன்பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.