வெஜ் பிரியாணி

தேதி: May 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

பாசுமதி அரிசி (அ) சாப்பாட்டு அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - ஒன்று
கேரட், பீன்ஸ், உருளை - கால் கிலோ
மீல் மேக்கர் - சிறிது
தனி மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக‌) - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
பொடிக்க‌:
மிளகு - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி


 

அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற‌ வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மீல் மேக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க‌ விடவும். நன்கு கொதித்து உப்பி வந்ததும் இறக்கி தண்ணீர் வடித்து ஒன்றிரண்டாக‌ நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கேரட், பீன்ஸ், உருளை, மீல் மேக்கர் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
காய்கறிகளுடன் தனி மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊற‌ வைத்த‌ அரிசியை சேர்த்து மெதுவாக‌ அரிசி உடைந்து விடாமல் கிளறவும்.
அரிசி, காய்கறிக் கலவையில் தக்காளியும் சேர்த்து கிளற‌வும்.
அதில் தேவையான‌ தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி பொடி செய்த மிளகு, சீரகத்தை சேர்க்கவும். (தண்ணீரின் அளவு பாசுமதி அரிசியாக‌ இருந்தால் ஒரு கப்பிற்கு 1 1/2 கப் என்றும், சாப்பாட்டு அரிசியாக‌ இருந்தால் ஒரு கப்பிற்கு 2 கப் என்றும், காய் வேக‌ கூடுதாலாக‌ அரை டம்ளர் தண்ணீரும்வைக்கவும்.) நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி தீயை அதிகமாக‌ வைக்கவும்.
குக்கரில் ஆவி வரும் போது சிம்மில் வைத்து ஆவி அடங்கியதும் திறந்து கரண்டியால் அடி வரை நன்கு கிளறி மீண்டும் மூடி தீயை அதிகமாக‌ வைத்து வெயிட் போடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும். (இப்படி செய்வதால் அடி பிடிக்காமல் சீக்கிரம் வெந்து உதிரி உதிரியாக‌ வரும்.)
ஆனியன் ரைத்தாவிற்கு வெங்காயத்தை பொடியாக‌ நறுக்கி உப்பு சேர்த்து நன்கு கிளறி அப்படியே வைக்கவும். பரிமாறும் போது தயிர் சேர்த்து பரிமாறவும்.
சூடான‌ சுவையான‌ வெஜ் பிரியாணி ரெடி. ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.

இந்த‌ பிரியாணிக்கு கறிவேப்பிலை, மஞ்சள்தூள் ஆகியவை சேர்க்க‌ வேண்டாம். இது சுவையை மாற்றி விடும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் முதலிலேயே சேர்க்கவும். தக்காளி கடைசியாக‌ சேர்க்கவும்.

ஆனியன் ரைத்தாவுக்கு உப்பு சிறிது கம்மியாக‌ சேர்க்கவும். இல்லையெனில் கரிக்கும். இதற்கு சிறிது சேர்த்தாலே போதுமானது. தயிர் கடைசியாக‌ பரிமாறும் போது சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Veg Biriyani Super.. Inga Vasam Visuthu.. oru Plate pls.. balanayagi

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவா. ப்ளேட் மட்டும் வேணுமா இல்ல‌ அதுல‌ பிரியாணியும் வெச்சி வேணுமா?

எல்லாம் சில‌ காலம்.....

parka romba nalla erukku,sapidavum kandippa apadithannu nenaikiren

entha mathiri veg biryalni pannumbothu na konjam "curd" serpen masala ellam pottu thalikkum pothu, taste kudukkum athukkaga

All is Well

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

நன்றி பிருந்தா. இதுல‌ மசாலா எதுமே சேர்க்க‌ வேண்டாம். தயிர் விருப்பப் பட்டால் சேர்க்கலாம். வெறும் காரத்தூள் மட்டும் சேர்த்தால் போதுமானது.

எல்லாம் சில‌ காலம்.....

வெஜ்பிரியாணி ரொம்ப அழகா ஛செய்து இருக்கிங்௧
வாழ்த்துக்௧ள்

ML

நன்றி கல்யாணி. இதே மாறி செய்ங்க‌ உங்களுக்கும் அழகா வரும். சுவையாவும் இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

யம்மி பிரியாணி செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலக்கல் பிரியாணி.நானும் இப்படிதான் செய்வேன்.சூப்பர் பிரசண்டேஷன்

Be simple be sample

நன்றி முசி. செய்து பாருங்க‌. சுவை உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

//கலக்கல் பிரியாணி// என்ன‌ இருந்தாலும் உங்க‌ மட்டன் பிரியாணி அளவுக்கு இல்லயே.

எல்லாம் சில‌ காலம்.....