பொட்டோட்டோ சீஸ் ஆம்லெட்

தேதி: May 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.7 (3 votes)

 

முட்டை - 4
உருளைக்கிழங்கு - ஒன்று
சீஸ் - ஒரு ஸ்லைஸ்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி விரல் நீள துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். சீஸை துண்டுகளாக்கியோ அல்லது துருவியோ சேர்க்கவும்.
நாண்ஸ்டிக் பேனில் முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
ஆம்லெட் ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
மற்றொரு புறம் வேக விட அதை மீண்டும் பேனிற்கு பொறுமையாக மாற்றவும்.
இருபுறமும் வெந்ததும் இறக்கவும். பொட்டோட்டோ சீஸ் ஆம்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Samayal Rani Kalakuringa.. Potato Cheese Semma kalakal.. super Reva..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நீங்களா? சூப்பர். எப்டி இப்டிலாம்?

எல்லாம் சில‌ காலம்.....

Wowwwww., looking nice have to try it

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

it suddenly looks small pizza

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &அறுசுவை டீம் மிக்க நன்றி

Be simple be sample

சாப்பிடவும் சூப்பரா இருக்கும் . மார்னிங் சிம்பிள் பிரேக்ஃபாஸ்ட் .தான்க்யூ

Be simple be sample

நீங்களா? சூப்பர். எப்டி இப்டிலாம்?// ஏங்க இப்படி.தான்க்யூ

Be simple be sample

தான்க்யூ பிருந்தா. செய்து பாருங்க.

Be simple be sample

இது என் மகளுக்கு ரொம்பப் பிடிக்கும் ரேவதி. அவங்களுக்கு உருளையை துருவித்தான் சேர்க்கணும். இந்த செய்முறையும் நல்லாயிருக்கு. :)

அட துருவலும் ஈசிதான்லப்பா. நான் அப்படி செய்து பார்க்கிறேன்.இதுவும் நல்லாருக்கும் உருளை வாயில் கடிபடும் போது அது ஒரு டேஸ்ட். செய்துபார்த்து சொல்லுங்க. தான்க்யூ வாணி

Be simple be sample