தேதி: May 11, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
நெய் - 3 தேக்கரண்டி
மிளகு - 10 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
முந்திரி (அ) பாதாம் - 5
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து களைந்து வைக்கவும்.

அதனுடன் உப்பு சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் (1 டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் தண்ணீர் போதுமானது. பருப்பிற்காக அதிகம் வைக்க வேண்டாம்.) ஊற்றி குக்கரில் குழைய வேக வைக்கவும்.

மிளகு, சீரகத்தை தயாராக வைக்கவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி (அ) பாதாம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி (அ) பாதாம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை வேக வைத்த பருப்பு அரிசி கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

சுவையான வெண்பொங்கல் தயார். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
