blood increase pananum sisters

Hai sisters kalai vanakkam yellorukkum.......
Sis ipo nan theliva irukken unga yelloroda advice nalayum... so ini sucide pathi lam yosikka matten... enaku ena kavanichu therila amma athai uelorum engala yethukala so manasalavila romba vali yeppavum manasu alutham so sariya sapidurathu ila velaiku poidu vandhu v2 vela chensu sapidu padukkave time 11 ku mala agidum aathuku appuram thoonga than thonum husband kita nerunga tjonala athoda manasu la happiness ilatha thala thonala so blood um 6 point than iruku then sexuel life la interest ila ithellam en problms now en hus abroad poirukar return 1 year agum athukulla nan ithellam sari panni aganum athuku neenga than sis help pananum nan enna pananumnu plz help me

//enaku ena kavanichu therila amma athai uelorum engala yethukala so manasalavila romba vali// ம். ஆனால் ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே! ஒரு அளவுக்கு மேல் இதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. முடிந்தால் உறவைச் சரி செய்ய என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். கவலைப் படுவதால் அது ஆகப் போவது இல்லை. //yeppavum manasu alutham// :-) உங்களுக்கு சிந்திக்கத் தெரியுது. அப்போ நிச்சயம் உங்களால் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியும். //so sariya sapidurathu ila// ஏன்? கவலைப் பட்டுட்டே சாப்பிடுங்க. சாப்பிடாம இருந்தா மட்டும் அம்மாவும் அத்தையும் சேர்த்துப்பாங்கன்னா சாப்பிடாம இருங்க. அவங்கல்லாம் வேற வீட்ல இருக்காங்க. நீங்க சாப்பிடாம இருந்தா அவங்களுக்குத் தெரியவா போகுது! :-) //velaiku poidu vandhu v2 vela chensu sapidu padukkave time 11 ku mala agidum// ஹை! இது சரியில்ல. குடும்பி நானே நீங்க சொன்ன எல்லாம் பண்ணிட்டு 9;30க்குல்லாம் தூங்கப் போய்ருறேன். ப்ளான் பண்ணுங்க. ஒரு ஆளுக்கான சமையல்தானே! சிம்பிளா ஹெல்தியா பண்ணலாம். வீட்டுல குப்பையாக்க ஆள் இல்லை. அப்போ சுத்தம் பண்ணவும் அதிக நேரம் எடுக்காதே!!!

//aathuku appuram thoonga than thonum husband kita nerunga tjonala// இப்போ... உங்களுக்கு களைப்பா இருந்தா தூங்கணும்னு தெரியுது இல்ல!! குழந்தை வேணும்னா வேலைகளைக் குறைச்சுக்கங்க. நீங்கதானே கணவர் வெளிநாடு போய்ட்டாங்கன்னு சொன்னீங்க!! குழப்புறீங்க. நான் உங்க தமிங்கிலத்தைத் தப்பா புரிஞ்சுட்டேனா!!

//athoda manasu la happiness ilatha thala thonala// ஆனால் குழந்தை இல்லைன்னு மட்டும் தோணுதா! முன்னுக்குப் பின் முரணா இருக்கு உங்க யோசனைகள். :-)

//athukulla nan ithellam sari panni aganum// ஆமாம்.

//athuku neenga than sis help pananum// அவ்வ்வ்வ்!! இது நல்ல கதையா இருக்கே! உங்களுக்கு நல்லாத் தெரியுது நீங்க ஒழுங்கா சாப்பிடல என்று. நாங்க வந்து சமைச்சுக் கொடுக்க முடியுமா? ஊட்டி விட முடியுமா? //nan enna pananumnu plz help// உங்களுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணணும். வெளிய இருந்து ஹெல்ப் வர முடியாது. உங்க பெரிய பிரச்சினை.... சுயபச்சாத்தாபம். முதல்ல விடுங்க அதை. மீதி எல்லாம் சரியாகும்.

அனேகம் குழந்தை கிடைச்சதும் அம்மா, அத்தை உங்களை சேர்த்துக்க சான்ஸ் இருக்கு. அதுக்கு குழந்தை வேணும். குழந்தை கிடைக்க... உங்க மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்கணும். ஒழுங்கா சாப்பிடுங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. ஒரு வருஷம் உங்களுக்கு சுவாரசியப்படாத காரியத்தைப் பண்ணத் தேவையில்லை. நிம்மதியா இருங்க. உழைப்பு என்று காரணம் காட்டி தொடந்தும் உங்க கணவர் வெளிநாட்டுலயே இருக்கிற மாதிரி விட்டால் உங்களுக்கு லாபத்தை விட நஷ்டம்தான் அதிகம். கலியாணம் என்று ஆயாச்சு. இதனால தன் பெற்றோரைப் பிரிஞ்சது நீங்க மட்டும் இல்லை, உங்க கணவரும்தான். அவரும் உங்களைப் போலவே சாப்பிடமால் தூங்காமல் நீங்க சொல்ற அதே காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன தோன்றும்! உங்களை நிராகரிக்கிற மாதிரி இராதா? எதற்காக இத்தனை கஷ்டம் என்று கூடத் தோணலாம். உங்க விருப்பம் விருப்பமின்மைகளை, கவலைகளை மட்டும் யோசிக்காம மற்றவர்கள் இடத்திலிருந்தும் யோசிச்சுப் பாருங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப் பாருங்க.

குதிரைக்கு, "தண்ணி இதோ இருக்கு," என்று காட்டி வேணுமானா விடலாம். குடிக்கிறது, அது தானாவேதான் பண்ணியாகணும். :-) திரும்பத் திரும்ப வந்து "தண்ணி எங்க!" என்று கேட்டா... நாங்க தண்ணி காட்டத்தான் முடியும். :-)

பூங்கோதை அழகா ஒரு ஐடியா சொன்னாங்கல்ல! அதையும் யோசிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Nan husband irukappa sonathu than andha point.. vela mudichu thoonga tym agum nu now y sonenna ? Apo athu problm i mean enaku husb near la irukka pa thonala and udambum keduthukiten now hus ila vara 1 year agum athukum nan past la pannina indha thapellam sari pananumnu athuku blood increase panna endha mathiriyana unavugal yedithukanumnu ketten sis
Neenga romba nalla pesureenga sis i like u and very thank for u my sis

// now y sonenna ?// :-))) கேள்வில்லாம் கேட்காதீங்க. எனக்கு தமிழும் ஆங்கிலமும் சிங்களமும் தனித்தனியாகப் படிக்க வரும். இப்படி மணிப்பிரவாளமாக ஒரு பாஷை எழுதினால் என் சின்ன மூளைக்கு எட்டுறதுதான் எட்டும். தவிர... இங்க உள்ள எல்லா போஸ்ட்டும் படிக்கிறதும் கிடையாது. "தமிழ்ல தட்டுங்க," என்று கேட்காம, பொறுமையா படிச்சுட்டு இமா உங்களுக்குப் பதில் போட்டேன் என்கிறதே பெரிய விஷயம். :-)))

//blood increase panna endha mathiriyana unavugal// முன்னால இப்படிக் கேட்டதா கண்ணுல படல. நீங்க நான்வெஜ் சாப்பிடுற ஆளாக இருந்தால் பிரச்சினை இல்லை. ரெட்மீட் சாப்பிடுங்க. அளவோட இருக்கட்டும். கொழுப்பை நீக்கிட்டு சாப்பிடுங்க. பிறகு குண்டாகிட்டா சிக்கல். மீன் நிறைய சாப்பிடலாம்.
மறக்காம நல்லா எக்சர்சைசும் எடுங்க.

கடும் பச்சை நிறமான கீரைகள் நிறையச் சேர்த்துக்கங்க. ஆனால்... தனியே கீரைகளிலிருந்து முற்றாக இரும்புச் சத்து உறிஞ்சப்படுவது இல்லை என்கிறார்கள். அதனால் கூடவே சிறிது விலங்குப் புரதமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை கிடைச்சா சாப்பிடுங்க. குறிஞ்சா, பஷன் இலைல இரும்புச் சத்து நிறைய இருக்கு.

இரத்த விருத்தி என்று மேலே தட்டி சர்ச் பண்ணுங்க. சில த்ரெட்ஸ் கண்ணுல படுது. தமிழ்ல தட்ட முடியாட்டா காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

மண்ணிசிடுங்க இனிமேல் தமிழ் லேயே எழுதுறேன்

மேலும் சில பதிவுகள்