தேதி: February 9, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - 500 மில்லி
சர்க்கரை - 125 கிராம்
முட்டை - 3
கஸ்டர்டு பவுடர் - 5 மேசைக்கரண்டி
ப்ரெஸ் க்ரீம் - 5 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி
முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும்.
மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும்.
பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.
பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும்.
Comments
வணக்கம்ப்ரெஷ் க்ரீம்
வணக்கம்
ப்ரெஷ் க்ரீம் தமிழ்நாட்டிலும் கிடைகுதுங்க அது பால் அடையிலிருன்ந்து எடுப்பதுதான் ஸ்பென்சர், பழமுதிர்நிலையம் போண்ற கடைகளில் கிடைக்கும் ப்ரிஜ்ஜில் இருக்கும்.
doubt
ப்ரெஷ் க்ரீம் என்றால் என்ன? இந்தியா ல எப்படி கேக்கனும்
anbudan
suganya
anbudan
suganya