தேதி: May 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோழி - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - கால் கிலோ
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
பாதாம் பருப்பு (அல்லது) முந்திரி - 7
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மல்லித்தழை, புதினா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பொடிக்க :
வெள்ளை மிளகு - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2
கோழித் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

பொடிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பை, தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்னர் அதனுடன் தாக்காளி, மல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கோழித் துண்டுகள், மிளகாய்த் தூள், தனியா தூள், பொடித்த தூள் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் தயிர், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு 8 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வேக விடவும்.

பிறகு அதில் அரைத்த பாதாம் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான வெள்ளை கோழி குருமா ரெடி.

Comments
assalamu alaikkum musi
Innaiku lunch ku idan saiyya pogiren
முசி
குருமா நல்லாயிருக்கு முசி, இடியாப்பத்திற்க்கு பெர்ஃபெக்ட் ஜோடி :)
முசி
கலக்கலா இருக்கு. நல்ல சுவையான டிஷ்.
எல்லாம் சில காலம்.....
musi
கலக்கல் சிக்கன். சூப்பர் முசி.
Be simple be sample
நன்றி
குறிப்பினை வெளியிட்ட டீமிர்க்கு நன்றி.
முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க நன்றி.செய்து பாருங்க.ஷெக் நசிரா.
ஆமாம்,இடியாப்பத்திற்க்கு சூப்பரா இருக்கும்.நன்றி;வாணி.
மிக்க நன்றி;பாலா.
ரொம்ப நன்றி;ரேவதி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
idiyaabam
english enna name idiyaabbam?
இடியப்பம் & coe
இடியப்பத்துக்கு ஆங்கிலம் string hoppers. சிலர் நூலாப்பம் என்பாங்க இல்ல! :-)
¬¬¬¬¬
முசி... அது என்ன குருமாவுக்குப் பக்கத்துல c o e என்று எழுதி இருக்கு!! :-)
- இமா க்றிஸ்
இமாம்மா
உங்க பதிவை நான் இப்ப தான் பார்கிறேன்,அது என் பையனோட லெட்டர்ஸ்.சிறிது மாற்றதிர்க்கு தான்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.