கொண்டைக்கடலை வடை

தேதி: May 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
காய்ந்த‌ மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு (தோலுடன்) - 5
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

வெள்ளை கொண்டைக்கடலையை 6 மணி நேரம் அல்லது குறைந்தது 2 மணி நேரம் ஊற‌ வைக்கவும்.
ஊறிய‌ கடலையை தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, பூண்டு (தோலுடன்), சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக‌ அரைக்கவும்.
அரைத்த கடலையுடன் பொடியாக‌ நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும்.
இதை மசால் வடை போல‌ வட்டமாக‌ தட்டி சூடான‌ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான‌, கொண்டைக்கடலை வடை தயார்.

மசால் வடை போல‌ இருந்தாலும் இது அதை விட‌ க்ரிஸ்பியாகவும், நடுவில் ஸாஃப்டாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்