ப்ரோக்கலி ஆலு மசாலா

தேதி: May 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப்ரோக்கலி - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

காய்கறிகளை கழுவி நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைக்கவும்.
உருளை பாதி வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கலி பூக்களை சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
சுவையான ப்ரோக்கலி ஆலு மசாலா தயார்.
சப்பாத்தி, சாம்பார் மற்றும் கலந்த சாத வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Easya nallaruku. Super.

Be simple be sample