
நாம சின்ன வயசா இருக்கறச்சே எவ்ளவோ பாட்டு பாடி இருக்கோம். அதுலயும் ஒரு சில பாட்டு நம்மால மறக்க முடியாம இருக்கும் இல்ல. அது மாறி எனக்கும் மறக்க முடியாத சின்ன வயசு பாட்டு இருக்குங்க. என் சின்ன வயசுல பள்ளியில் பேபி கிளாஸ் படிக்கறப்போ (இப்போ தாங்க l.k.g,u.k.g எல்லாம். அப்போ என் ஸ்கூல்ல பேபி கிளாஸ் தான்) என்னையும் நம்பி என் கிளாஸ் டீச்சர் இந்த பாட்ட என்ன ஸ்டேஜ்ல பாட வெச்சாங்க. நானும் ரொம்ப நல்லா பாடினேன். பயங்கர கை தட்டல் வாங்கின பாட்டு. அப்றம் வீட்டுக்கு வந்த அப்றம் அப்பா ரெக்கார்டு பண்ணலாம்னு பாட சொன்னா வெக்கம் வந்து பாட மாட்டேனு சொல்லிட்டேன். அப்றம் அந்த பாட்டு மறந்தே போச்சி. இப்போ என் குழந்தைக்கு தூங்க வைக்க பாட்டு பாடற அப்போ அந்த பாட்டு தானா ஞாபகம் வந்துடுச்சி. இத உங்க கூடவும் ஷேர் பண்ணனும்னு ஆசையா இருந்துச்சி. அதான் சரி இதுல போடலாம்னு போடறேன். இது கேள்வி பதில் பாட்டு. நான் கேள்வி பாட்டு பாட என் சக மாணவி பதில் பாட்டு பாடுவா. இதாங்க அந்த பாட்டு.
1. முட்டைக்குள்ளே இருக்கும் போது,
முட்டைக்குள்ளே இருக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
உலகத்த பாக்க போறேன், உலகத்த பாக்க போறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
2. உலகத்த பாத்த பின்னே உலகத்த பாத்த பின்னே
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
குப்ப மேட்ட பாக்க போற குப்ப மேட்ட பாக்க போற
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
3. ரெக்கைய பிக்கும் போது, ரெக்கைய பிக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
ஹேர்கட் பண்ணிக்கிறேன், ஹேர்கட் பண்ணிக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
4. மஞ்ச பொடி தூவும் போது மஞ்ச பொடி தூவும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
மஞ்ச தேச்சி குளிக்கற மஞ்ச தேச்சி குளிக்கற
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
5. மசாலா தடவும் போது, மசாலா தடவும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
ஃபேஷியல் பண்ணிக்கிறேன், ஃபேஷியல் பண்ணிக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
6. எண்ணையில் பொரிக்கும் போது,
எண்ணையில் பொரிக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
ஆயில் பாத் எடுத்துக்கிறேன், ஆயில் பாத் எடுத்துக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
7. வாய்க்குள்ளே போகும் போது, வாய்க்குள்ளே போகும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?
உலகம் ரொம்ப மோசம், உலகம் ரொம்ப மோசம்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி
இதாங்க பாட்டு. இன்னும் கொஞ்சம் நடுல ஞாபகமே வரல. மண்டைல இருக்க வரைக்கும் அனுப்பறேன். பாவம் இல்ல அந்த கோழி குஞ்சி. பாவம் பாத்து என்ன பண்றது. நாம சாப்டலனா கோழி அடிக்காம தான் இருப்பாங்களா இல்ல விக்காம தான் போக போதா? இன்னும் சில பாடல்களும் இருக்கு. இரண்டாம் பாகம் விரைவில்.....
Comments
பாலா
பாட்டு ரொம்ப புதுசு. நான் கேள்விப்படாதது.
கோழி ரொம்ப ஜாலியா எஞ்சாய் பண்ணி இருக்குன்னு புரியுது:))
ரெக்கை ___ஹேர்கட்
மசாலா___ஃபேசியல்
சூப்பர் பாலா.
இன்னும் எது மறந்து போச்சு.
உப்பு தடவுறது___பௌடர் போடற மாதிரி
தோல் உறிப்பது __ டிரஸ் மாத்துற மாதிரி
இன்னும் சொல்லுங்க பாலா
நிகி
நன்றி நிகி. தெரியல. இன்னும் அழகான வரிகள் நிறைய வரும். சுத்தமா வேற எதுமே ஞாபகத்துக்கு வரல. இம்புட்டு தே ஞாபகம் வந்துச்சி.
நீங்க சொன்ன மாறி உப்பு தடவுவது பவுடர் போடறதா கூட வரும்.
இப்போ ஞாபகம் வருது ஒரு லைன். மஞ்சள் பூசறது கூட வரும்.
(மஞ்சள் தேச்சி குளிக்கிறேன் என்று தான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சி)
ஹையா என் குழந்தைக்கு பாட இன்னும் இரு லைன் கிடைச்சிடுச்சி. நன்றி நிகி.
எல்லாம் சில காலம்.....
ஹாய் பாலா, இந்த பாட்டு ஒரு
ஹாய் பாலா,
இந்த பாட்டு ஒரு படத்துல கூட வந்துருக்கு,படம் ஆல்பம்.நேரம் கிடைக்கும் போது கேளுங்க விட்ட வரி எதுனு தெரியும்
திவ்யா
இப்டி சொன்னதுக்கு நீங்களே கேட்டு அந்த வரி என்னனு சொல்லி இருக்கலாம் இல்ல. இருந்தாலும் நன்றி திவி. நான் அந்த பாட்டு கேட்டேன். ஆனால் இதில் உள்ள வரிகளே கூட இல்லை. ஆனால் அதிலிருந்து இன்னும் ஒரு வரி கிடைத்தது.
உலகத்த பாத்த பின்னே என்ன சொல்லுச்சாம் கோழிகுஞ்சி?
குப்பமேட்ட பாக்க போறேன் என்று தான் சொல்லுச்சாம் கோழிகுஞ்சி.
நன்றி திவி.
எல்லாம் சில காலம்.....
பாலா
நல்லாருக்கே இந்த பாட்டு. நானும் இப்பதான் கேட்கறேன்.முழு பாட்டும் தெரிஞ்சுடுச்சுன்னா எடிட் பண்ணி சேர்த்துடுங்க வரிகளை.
Be simple be sample
hi all
paatu nalla irukuthu, aana manasu romba valikuthu,
ரேவ்'ஸ்
இப்போ தான் இன்னும் 3 வரிகள் கிடச்சி இருக்கு. இன்னும் கிடைத்ததும் சேர்த்துடறேன்.
எல்லாம் சில காலம்.....
சஞ்சு
பாவம் ஃபீல் பண்ணாதீங்க சஞ்சு. பாத்துக்கலாம். அதுக்காக யாராவது சிக்கன் சாப்டாமலா இருக்க போறோம். டோன்ட் வொரி.
எல்லாம் சில காலம்.....
குழந்தைப் பாடல்கள்
//இந்த கால பெற்றோர் தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் அல்லாமல் தமிங்கிலத்தில் பழகுகின்றனர். ஆகவே குழந்தையின் புரிதல் தாமதமாகிறது. இதை பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.// என்று இரண்டாம் பாகத்தில் பாலநாயகி சொல்லியிருந்ததைப் படித்துவிட்டு இங்கே வந்தால்... //ஹேர்கட் பண்ணிக்கிறேன்// //ஃபேஷியல் பண்ணிக்கிறேன்// //ஆயில் பாத் எடுத்துக்கிறேன்// ;))))) உலகம் ரொம்ப மோசம் ;))) ஆனால் பாடல் ரசிக்கிற மாதிரி இருக்கு.
- இமா க்றிஸ்
இமா
என் பெற்றோரும் இந்த கால பெற்றோர் தான். எனக்கும் தமிங்கிலத்தில் தான் கத்து குடுத்தாங்க. அதான் எனக்கும் புரிதல் தாமதமாகிறது. நானும் இந்த கால பெற்றோர் தானே! என்ன செய்ய? எனக்கு இமா மாறி அம்மா இல்லையே!
அய்யய்யோ இதையும் கலாய்க்காதீங்க. எனக்கு இமா மாதிரி அம்மா இல்லையே ;)
எல்லாம் சில காலம்.....