வாசனை பூ வைக்கலாமா?

என் குட்டி தேவதைக்கு 7வது மாதம் ஆரம்பித்திருக்கிறது.நான் இன்னும் அவளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன்.மல்லிகைப்பூ,முல்லைப்பூ போன்ற வாசனையான பூக்களை நான் தலையில் வைக்கலாமா?வாசனை மிக்க பூக்கள் வைத்தால் குழந்தைக்கு மாந்தம் வரும் என்கிறார்கள்.அது உண்மையா?

Hi remu sister epti erukinka
Baby epti eruka

வாசனை பூ வைக்கிறதுனால் சில குழந்தைகளுக்கு அதன் மணத்தால்
தும்மல் போன்ற சில பிரச்சனை௧ள் எழும்

சில குழந்தை௧ளுக்கு மட்டுமே இப்படி பிரச்சனை௧ள் எழும்
எல்லா குழந்தைகளுக்கும் அப்படி இருக்காது

எனது பாட்டி குழந்தை பெற்ற புதிதில் பூக்௧ள் வைக்௧வேண்டாம் சில மாதம் போகட்டும் என்று சொல்வாங்௧ காரணம் பூக்௧ள் வைத்துக்கொண்டு நாம் ௧ண் அயர்ந்து தூங்கிவிட்டால் விழித்திருக்கும் குழந்தை பூவை விழுங்கிவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை எழும் ஆகையால் வைக்௧ கூடாது என்று சொல்வார்௧ள்

ML

//தாய்ப்பால்// & //தலைல பூ வைக்கிறது// தொடர்பு எதுவுமே இல்லை.

//மல்லிகைப்பூ,முல்லைப்பூ போன்ற வாசனையான பூக்களை நான் தலையில் வைக்கலாமா?// வேண்டாம் என்று சொல்வேன். ஒரு வேளை... உங்கள் குழந்தைக்கு வாசனை அலர்ஜியாக இருந்தால்!! //மாந்தம்// அது என்ன என்று தெரியவில்லை. ஆனால் கல்யாணி சொன்னது போல தும்மல் வரலாம்.

//எல்லா குழந்தைகளுக்கும் அப்படி இருக்காது// உண்மை. ஆனால் பூ வாசம் அலர்ஜியாக இருந்தால் குழந்தை சிரமப்படும்; அதை நீங்கள் வேறு விதமாகப் புரிந்துகொள்வீர்கள்; பூ வைப்பதைத் தொடர்ந்து கொண்டே வேறு கைவைத்தியம் பற்றி யோசிப்பீர்கள்; குழந்தையின் பிரச்சினை அப்படியே இருக்கும், அல்லது அதிகமாகவும் கூடும். பூ வாசனை எனக்கும் பிரச்சினையான விஷயம். மூச்சு விட சிரமமாக இருக்கும். சில நாட்களில் தலை வலி, முகம் வீங்குவது எல்லாம் கூட இருந்திருக்கிறது. நான் வளர்ந்தவர், எனக்கே கொடுமையாக இருக்கும் போது, சின்னக் குழந்தை அது, பாவமில்லையா! உங்க குழந்தை நல்லா இருக்கணும் என்கிற விருப்பம் உங்களுக்கு நிறையவே இருக்கும்.

//பூவை விழுங்கிவிட்டால்// கல்யாணி சொன்னது போல் இதுவும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.

‍- இமா க்றிஸ்

Epadi irukanga.papa epad iruka.babyku solid food start panitangala

Life Is Easy When U "Accept All"

நான் பாப்பா பிறந்ததிலிருந்து பூவே வைப்பதில்லை.எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை ஃபங்ஷன் இருக்கு.நான் பூ வைக்கலைனா என் நாத்தனாரும்,மாமியாரும் ஏதாவது சொல்வாங்க.ஏன்னா பாப்பா பிறந்து 9 வது நாள் படைக்கும்போது பூ வைக்கலைன்னு புலம்பி தீர்த்துட்டாங்க.ஆனாலும் நான் வைக்கலை.அம்மாதான் சொன்னாங்க பூ வைத்தால் மாந்தம்(வயிற்றுப்போக்கு) வரும்னு.எனக்கு அம்மா சொன்னப்ப புரியல.இப்போ நீங்க கொடுத்த பதிலால் எப்படின்னு தெளிவா புரியுது.அதனால் கண்டிப்பாக பாப்பா வளரும்வரை எந்த பூவையும் வைக்கமாட்டேன்.இமா அம்மா நீங்க சொன்ன மாதிரி என் குழந்தை நல்லா இருக்கணும்ங்கிற விருப்பம் எனக்கு அதி....கமாக உண்டு.மாமியார், நாத்தனார் சொன்னாலும் அவங்களுக்கு எடுத்து சொல்ல தெளிவான பதில் இப்போ என்கிட்ட இருக்கு.

எல்லா புகழும் இறைவனுக்கே

நானும்,பாப்பாவும் நல்லா இருக்கோம்.நீங்களும்,பையனும் எப்படி இருக்கீங்க.பாப்பாவுக்கு இதுவரை தாய்ப்பால்தான்.இன்றுதான் (புதன்கிழமை) கேழ்வரகு களி ட்ரை பன்னபோறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே

முன் காலத்தில் குழந்தை பிறந்த‌ பின் ஏறக்குறைய 5 மாதங்களாவது தாய் வீட்டில் சீராடி விட்டுத்தான் பெண்கள் தங்கள் கணவர் வீடு செல்வர். இக்காலத்தில் பல்வகையான‌ சூழ்ல்களால் கணவனும் மனைவியும் சேர்ந்தே இருக்கவேண்டிய‌ நிலை மட்டுமல்ல‌ யார் துணையும் இல்லாத‌ நிலையும் அமைந்து விடுகிறது.
பூக்கள் அணிவதால் சில‌ பூக்களின் கடுமையான வாசனை குழந்தைக்கு ஆகாது, மல்லிகைப்பூ தாய்ப்பால் சுரப்பதைக் குறைத்து வற்றச் செய்து விடும்.
சில‌ பூக்களில் நம் கண்ணுக்குத் தெரியாத‌ பூச்சிகள், புழுக்களும் இருக்கும்.
சில‌ பூக்களில் உள்ள‌ தேனுக்காக‌ தேனீயும் எறும்பும் வர‌ வாய்ப்பு உண்டு.
இக்காலத்தில் விதவிதமான‌ இரசாயன‌ மருந்துகளின் கலவை நெடி வேறு.
பூவை அன்னாளில் வாழை நாரில் தான் கட்டுவார்கள். இன்னாளிலோ
கலர் கலர் கெமிகல் கலந்த‌ நூலில் தான் கட்டுகிறார்கள். அதைத் தொட்டு விட்டுத்தான் குழந்தையையும் தொடுவோம்.
மல்லிகையும் அல்வாவும் எதற்குஎன்று மணமான‌ அனைவருக்கும் தெரியும்.
சில‌ பூக்களின் வாசனை மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி போன்றவை கணவன் மனைவி இருவரையும் நிலைதடுமாற‌ வைக்கும். அதற்குப் பின்னால் சுரக்கும் பாலைக் குடிக்கும் குழந்தையின்
குணம் மாறும் > தொடராக‌ மற்ற‌ நடவடிக்கைகளும் மாறுபாட்டுக்கு உள்ளாகும்
என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், சில‌ தமிழ் இலக்கியங்களிலும் இக்கருத்து கூறப்படுகிறது. இக்கருத்தை ஏற்போர் ஏற்க‌
விடுவோர் விட்டுவிடுக‌. எனக்கு எட்டின‌ வரை கூறியுள்ளேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பூ வைப்பதால் பால் சுரப்பும் குறையும்ன்னு சொல்லுவாங்க.

Be simple be sample

//படைக்கும்போது பூ வைக்கலைன்னு// பாலூட்டாத சமயம் பூ வைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. நீங்கள் முக்கியமான அந்தக் கொஞ்ச நேரம் சூடி விட்டு குழந்தையைத் தூக்கும் சமயம் எடுத்திருக்கலாம். :-) //பாப்பா வளரும்வரை எந்த பூவையும் வைக்கமாட்டேன்.// அப்படி முற்றாகத் தவிர்க்கத் தேவையில்லை. :-) சந்தர்ப்பத்தைப் பார்த்து நடந்துக்கங்க, போதும்.

‍- இமா க்றிஸ்

ஆழமான,அவசியமான கருத்தை அழகாக சொல்லியிருக்கீங்க.மிக்க நன்றி.

எல்லா புகழும் இறைவனுக்கே

மேலும் சில பதிவுகள்